பொதுவாக நாம் ஒவ்வொரு பயன்பாட்டுக்கும் ஒவ்வொரு விதமான பொருட்களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக சோப்பு என்றால், குளிக்க ஒரு சோப்பு, சமையல் செய்த பாத்திரங்களை தேய்க்க ஒரு சோப்பு, துணிகளுக்கு ஒரு சோப்பு என மூன்று வகைகள் உள்ளன.
அதுபோல வீட்டில் ஒவ்வொரு உபயோகத்துக்கும் என இருக்கும் பொருட்களில், ஏதேனும் ஒன்று தீர்ந்து போனால், உடனடியாக வேறு ஒன்றை வாங்கி வைக்கிறோம்.
ஆனால், சில அசாதாரண சூழலில் புதிய பொருளை வாங்க முடியாமல் போகும் போது, அதற்கு மாற்றாக சில பொருட்களைப் பயன்படுத்தலாம். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.
திடீரென காலையில் வீட்டில் டூத் பேஸ்ட் இல்லாமல் போகலாம். உடனே கடைக்குப் போக முடியாமல் இருந்தால், அதற்கு மாற்றாக, பேக்கிங் சோடா பவுடரை தண்ணீரில் குழைத்து பேஸ்டாகப் பயன்படுத்தலாம். இதைக் கொண்டு பற்களை சுத்தம் செய்தால் பற்கள் பளிச்சிடும்.
இதேப்போல, இந்த பேக்கிங் சோடா பவுடரைப் பல்வேறு வகைகளில் பயன்படுத்தலாம்.
மழைக்காலங்களில் கார்பெட்டுகளில் இருந்து வரும் துர்நாற்றத்தைப் போக்க பேக்கிங் பவுடரை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
கழிவறைகளில் இருந்த வரும் துர்நாற்றத்தை உடனடியாகப் போக்க வேண்டும் எனில், பேக்கிங் பவுடர் கலந்த தண்ணீரைக் கொண்டு கழிவறைகளைக் கழுவி விடலாம்.
இது மட்டும் அல்லாமல், வீட்டில் உள்ள பாத்திரங்கள் பளபளக்க வேண்டும் என்றால், பேக்கிங் பவுடரைக் கொண்டு பாத்திரங்களைத் தேய்த்தெடுக்கலாம்.
அழுக்கடைந்த நகைகளை சுத்தம் செய்யும் போது, பேக்கிங் சோடாவுடன் சில சொட்டு எலுமிச்சை சாறை சேர்த்து, அதனை டூத் பிரஷ்ஷில் எடுத்து சுத்தம் செய்தால் நகைகள் பளிச்சென்று ஆகும். இதனை தங்க நகைகளுக்கும் பயன்படுத்தலாம்.
இதில்லாமல், புதிதாக இறைச்சி உணவுகளை சமைக்கத் துவங்கும் நபர்களுக்கு அதில் இருந்து வரும் நாற்றம் பிடிக்காமல் இருக்கலாம். எனவே, இறைச்சியை சமைக்கும் முன்பு, அதனை சில நிமிடங்கள் பேக்கிங் சோடா கலந்த தண்ணீரில் முக்கி வைத்து சமைக்கலாம். இதனால் நாற்றம் கட்டுப்படும். உணவு பொருள் எந்த வகையிலும் பாதிக்காது.
அழகான பீங்கான் அல்லது பிளாஸ்டிக் உபயோகப் பொருட்களில் ஏதேனும் கரை படிந்தால், அதன் மீது பேக்கிங் பவுடரை தண்ணீரில் குழைத்து பேஸ்ட்டாக்கி பூசி சில நிமிடங்கள் விட்டு பிறகு தேய்த்து கழுவினால் கரை போய்விடு