செவ்வாய், 25 ஜூன், 2013

இலவச புத்தகப்பை - பள்ளிக்கு எடுத்துச்செல்ல மாணவர்கள் தயக்கம்ஜூன் 24,2013,10:54 IST

எழுத்தின் அளவு :
சென்னை: தமிழக அரசு வழங்கும் இலவச புத்தகப் பையை பள்ளிக்கு எடுத்துச் செல்ல, மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை, நோட்டுப் புத்தகங்கள் உள்ளிட்ட பல உதவிகள் வழங்கப்படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், பள்ளி மாணவர்களுக்குக் காலணிகள், புத்தகப் பை (பேக்), லேப்-டாப் வழங்கப்படும் என, முதல்வர் ஜெ., அறிவித்தார். பள்ளிகள் துவக்க நாளன்று இலவச சீருடை, காலணிகள், நோட்டு, புத்தகம் மற்றும் பேக் வழங்க முதல்வர் உத்தரவிட்டதால், ஜூன் 10ம் தேதி முதல் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதில், 1 முதல் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஸ்மால் சைஸ், 4 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு, மீடியம் சைஸ், 8 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, லார்ஜ் சைஸ், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பெரிய, பேக் வழங்கப்படுகிறது.
தயக்கம்
அரசு சார்பில் வழங்கும் இலவச புத்தகப் பையில், தமிழக அரசின் சின்னம், முதல்வர் ஜெ., உருவம் அச்சிடப்பட்டுள்ளது. இதை பெற்றுச் செல்லும் மாணவர்கள், அந்த, பேக்கை பயன்படுத்தாமல், கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.அரசு சின்னம் மற்றும் முதல்வர் ஜெ., உருவம் அச்சிட்டுள்ள புத்தகப் பையை எடுத்துச் சென்றால், இலவச பொருளை பயன்படுத்துவதாகக் கூறுவர் என்ற எண்ணம் மாணவர்களிடம் உள்ளது.
மேலும், இந்த பேக்குகளில், ஒரு ஜிப் மட்டுமே உள்ளது. வெளியில் பேக் வாங்கினால் இரண்டு அல்லது மூன்று ஜிப்கள் இருக்கும். புத்தகங்களை தனித்தனியாக வைத்துக்கொள்ள முடியும். இதனால், இலவச பையை பயன்படுத்த மாணவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். சில மாணவர்கள், இலவச பேக்கில் உள்ள அரசு சின்னம் மற்றும் முதல்வர் ஜெ., உருவத்தை அழித்து விட்டு பயன்படுத்துகின்றனர்.