வெள்ளி, 28 டிசம்பர், 2012


தகுதித் தேர்வில் தேர்ச்சியின்றி நியமிக்கப்பட்ட ஆசிரியர் விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்: கல்வித் துறை உத்தரவு
தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்டவர்களின் விவரங்களை உடனடியாகத் தெரிவிக்குமாறு முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே தற்போது அரசுப் பள்ளிகளில் நியமனம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு நிதியுதவி பெற்று செயல்படும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத பலர் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால், பணி நியமனத்துக்கான கல்வித் துறை அனுமதி கிடைக்காத நிலை நீடித்து வருகிறது. சில பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ஊதியமும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய காரணங்களால் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமிக்கப்பட்டவர்களின் நிலை குறித்து தெளிவற்ற நிலை நீடித்து வருகிறது. இந்தக் குழப்பமான நிலையால் பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 23-8-2010 முதல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை உடனடியாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்

தொடக்க/ உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஜனவரி மாதம் 05.01.2013 மற்றும் 19.01.2013 இரண்டு குறுவள மைய பயிற்சி
தொடக்க/ உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஜனவரி மாத முதல் குறுவள மைய பயிற்சி (CRC) 05.01.2013 அன்று கலையும் கைவண்ணப் பொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பிலும், இரண்டாம் பயிற்சி  19.01.2013 அன்று "எளிய அறிவியல் சோதனைகள்"  என்ற தலைப்பிலும் நடைபெற இருக்கிறது.

வியாழன், 27 டிசம்பர், 2012

தொடக்க/ உயர்தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான அடுத்த குறுவள மைய பயிற்சி (CRC) 05.01.2013 அன்று கலையும் கைவண்ணப் பொருட்கள் தயாரித்தல் என்ற தலைப்பில் நடைபெறுகிறது

ஞாயிறு, 23 டிசம்பர், 2012


உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !
பள்ளிக்கூடம் என்றாலே சற்றென்று நினைவு கொள்வது நாம் கல்வி பயின்ற தொடக்கப்பள்ளிகளே ! காரணம் நெஞ்சம் நெகிழும் அந்த மலரும் நினைவுகள் பசுமரத்து ஆணி போல் பளிச்சென்று நம் மனதில் ஒவ்வொன்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும்.
அந்தவகையில் நமதூர் மேலத்தெருவில் கடந்த 1921 ஆண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இன்று நடுநிலைப் பள்ளி என்ற அந்தஸ்தைப் பெற்று அப்பகுதியை சுற்றி வசிக்கக்கூடிய ஏழை எளியோர் வீட்டு மாணவ மாணவிகள் கல்வியை கற்பதற்குரிய சிறப்பை வழங்கி வருகிறது. பரப்பளவில் மிகப்பெரும் இடத்தைக் கொண்டுள்ள பள்ளிகளில் இதுவும் ஒன்றாகும்.

என்னுடைய ஆரம்பக் கல்வியை இப்பள்ளியில் பயின்றதால் இப்பள்ளி மீது எனது கவனம் சற்றுக் கூடுதலாகவே இருக்கும். இப்பள்ளியின் சாலை வழியே பலமுறை நான் கடந்து சென்றிருந்தாலும் தேர்தல் நேரத்தில் எனது வாக்குரிமையை நிலை நிறுத்திக்கொள்வதற்காக [ ஓட்டு போடுவதற்காக ] மட்டும் சென்று வந்ததை தவிர்த்தால் மற்ற நேரங்களில் அங்கே செல்வதற்குரிய வாய்ப்பு எனக்கு அமையாமலேயே போய்விட்டது.

இன்று காலை எனது நண்பன் ஜமாலுதீன் மூலம் எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இருவரும் ஒன்றாகச் சென்றோம். பள்ளியை சென்றடைந்தவுடன் பள்ளியை முழுவதுமாக பார்வையிட்டுக் கொண்டே எங்களின் நினைவுகள் ஒவ்வொன்றையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துவாறு பார்வையிட்ட எங்களுக்கு அங்கே கண்ட காட்சிகள் அதிர்ச்சியடைய வைத்தன...

மாணாக்கர்களின் எண்ணிக்கை விகிதம் :
மிகுந்த ஜனத்தொகை இருக்கும் குடியிருப்பு பகுதியின் அருகே பள்ளி இருந்தும் மாணாக்கர்கள் எண்ணிக்கை என்னவோ !? இரண்டு இலக்க எண்ணைத் தாண்டாமல் இருந்தது எங்களுக்கு வேதனையைத் தந்தன. அனைத்து பள்ளிகளிலும் சமச்சீர் கல்வி பாட திட்டமே நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றன என்பதை மறந்து விட்டு கட்டணத்தை செலுத்தி கல்வியை கற்க எங்கேயோ அனுப்பி வைத்துவிடும் பெற்றோர்கள் நம் முன்னோர்கள் பலர் இதுபோன்ற பள்ளிக்கூடங்களில் கல்வி பயின்று பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் என்பதை மறந்து விட்டதேக் காரணமாக இருக்கும்.

புதிய உணவு வகைகளை சத்துணவு திட்டத்தில் அறிமுகம் செய்துள்ள தமிழக அரசு, புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், சீருடைகள், காலணிகள், வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி [ Geometry Box ], பேருந்து பயண அட்டை, கல்வி உதவித் தொகை, மிதிவண்டி, லேப்டாப் உட்பட தேர்வில் வெற்றிபெறும் மாணக்கர்களுக்கு பரிசுத்தொகை என இதுபோன்ற எண்ணற்ற சலுகைகளை வழங்கி அனைவருக்கும் கல்வி என்ற தொலைநோக்குத் திட்டத்துடன் அரசு செயல்படுத்தி வரும் வாய்ப்பை பெற்றோர்கள் நன்கு பயன்படுத்தி கொள்ளாமல் தங்களின் பிள்ளைகளை எங்கேயோ இருக்கும் பள்ளிக்கு கல்வி கற்க அனுப்புவதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை விகிதம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கின்றன.

வகுப்பு அறை !?
வகுப்பறையின் அருகே செல்வதற்கே எங்களுக்கு அச்சமாக இருந்தது. காரணம் நாங்கள் கல்வி பயின்ற காலக்கட்டத்திற்கு முன்பே கட்டப்பட்டிருந்த இக்கூடத்தின் சில பகுதிகள் இடிந்து விழுந்து இருப்பதைக் கண்டவுடன் அதிர்ச்சியாக இருந்தது. மீதமுள்ள பகுதியும் இடிந்து விழுந்து ஆசிரியர், மாணாக்கர் போன்றோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முன்பு இதில் கவனம் செலுத்துவது நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை.
உள்ளூர் பள்ளிகளை உயரச்செய்வோம் !
அடிப்படை வசதிகளான சுகாதாரம், குடி நீர், உணவுக் கூடங்கள் மற்றும் வகுப்பறைகளின் தரம், கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தி நமது பள்ளிகளை நாமே தரத்திலும் சேவையிலும் உயர்ந்து நிற்க துணை புரிவோம்.

தொடர் மற்றும் முழு மதிப்பீட்டு (சி.சி.இ) முறையில் பாடமெடுக்க புதிய ஆசிரியர்களுக்கு அறிவுரை
தொடர், முழு மதிப்பீட்டு (சி.சி.இ.,) முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டும்" என, புதியதாக பணியேற்றுள்ள ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.
தமிழகத்தில் டி.இ.டி., தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை, பி.எட்., பட்டதாரி ஆசிரியர்களுக்கு, சென்னையில் நடந்த அரசு விழாவில், முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணையை வழங்கினார்.

கிடைத்த பணியிடங்களில் பொறுப்பேற்கும் முன், முதன்மை கல்வி, மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம், மீண்டும் ஒரு முறை சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, புதிய ஆசிரியர்களுக்கு பாடமெடுப்பது, மாணவர்களிடம் நடந்து கொள்ளும் முறை போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்வி முறையான தொடர் மற்றும் முழுமதிப்பீட்டு (சி.சி.இ.,) முறையில் செயல்முறை விளக்க படங்களுடன் பாடம் நடத்த, புதிய ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

திங்கள், 17 டிசம்பர், 2012


பணி நியமன ஆணை பெற்ற அனைத்து இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களையும் 17.12.2012 அன்றே பணியில் சேர அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.
13.12.12 அன்று பணி நியமன ஆணை பெற்ற அனைத்து இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களையும் 17.12.2012 திங்கட்கிழமை அன்றே பணியில் சேர அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. புதிதாக பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகளையும். பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

புதன், 12 டிசம்பர், 2012

தமிழக அரசுக்கு 18,000 ஆசிரியர் குடும்பங்களின் சார்பில் மனமார்ந்த நன்றி



அனைத்து பணியிடங்களையும் திறமையான மின்ஆளுமை மூலம் 100% நேர்மையாக தேர்வு செய்தமைக்கு நன்றி

நூற்றாண்டு சாதனை - உண்மைதான்


பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முதலாக ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 25 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 18,291 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இன்றும், நாளையும் நடைபெறும் கவுன்சிலிங்கின் மூலம் காலி பணி இடங்களை ஆசிரியர்களே ஆன்லைன் மூலம் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் விரும்பிய இடங்களை தேர்வு செய்த பின்னர் பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்க முடிவு செய்துள்ளார். இதற்கான விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 13-ந்தேதி நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்து வருகிறது. பகல் 12 மணியளவில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார்.

           முதல்-அமைச்சர் நேரில் ஆணையை வழங்க இருப்பதால் 32 மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்கள் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அந்தந்த மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஏற்பாட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் 12-ந்தேதி மாலை புறப்பட்டு 13-ந்தேதி சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். பணி நியமன ஆணை பெற்ற ஆசிரியர்கள் 17-ந்தேதி பள்ளியில் சேர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி துறை சார்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் என்.ஆர். சிவபதி, முதன்மை செயலாளர் சபீதா, இயக்குனர்கள் கு.தேவராஜன், வி.கி. ராமேஸ்வர முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

திங்கள், 10 டிசம்பர், 2012


தேர்வான அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் தாங்கள் விரும்பும் இடங்களில் பணி நியமனம்  கிடைக்க வாழ்த்துக்கள்

1743 secondary grade teachers

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு.

இடை நிலை ஆசிரியர் கவுன்சிலிங்க் திருத்திய செயல்முறைகள் (CLICK HERE)

சென்னையில் டிசம்பர் 13-ந் முதல்வர் பங்கு பெறும் விழா நேரம் மாற்றம்


சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்டங்களைப் பெறவரும் மாணவ, மாணவியர், பெற்றோர் என, 50 ஆயிரம் பேர் வரை, விழாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மாலையில் விழா நடத்தினால், அனைவரும், வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பிரச்னை ஏற்படும் என, அதிகாரிகள் கருதினர். இதனால், பகல், 12:00 மணிக்கு, விழா மாற்றப்பட்டதாகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர்கள் ஆன்லைன் கலந்தாய்வு எந்தெந்த மாவடடத்தில் கலந்துகொள்வது குறித்த விளக்கம்
இடைநிலை ஆசிரியர்கள் பொறுத்தவரை ஆசிரியர் பட்டயப் பயிற்சி சான்றிதழ் எந்த மாவட்ட வேலைவாய்ப்பக அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த மாவட்டத்தில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். தேர்விற்கு தங்கள் அளித்த வீட்டு முகவரி (COMMUNICATION ADDRESS) உள்ள மாவட்டத்தை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையில்லை.  

புதிய ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடக்கும் இடங்கள் அறிவிப்பு

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும் இடங்கள் விவரம்:
மாவட்டம் கலந்தாய்வு நடக்கும் இடம்
--------------------------------------------------------------
1. சென்னை எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு
2. கோவை பாரதி மெட்ரிக் மே.நி.பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோவை
3. கடலூர் சி.இ.ஓ., அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
4. தர்மபுரி சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
5. திண்டுக்கல் அவர்லேடி மே.நி.பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
6. ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
7. காஞ்சிபுரம் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மே.நி.பள்ளி, காஞ்சிபுரம்
8. கன்னியாகுமரி எஸ்.எல்.பி., மே.நி.பள்ளி, நாகர்கோவில்
9. கரூர் பசுபதி ஈஸ்வரா நகராட்சி பெண்கள் மே.நி.பள்ளி, கரூர்
10. கிருஷ்ணகிரி அரசு ஆ.மே.நி.பள்ளி, கிருஷ்ணகிரி
11. மதுரை இளங்கோ மாநகராட்சி மே.நி.பள்ளி, செனாய் நகர், மதுரை
12. நாகை கிரசன்ட் மெட்ரிக் மே.நி.பள்ளி, நாகூர்
13. நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மே.நி.பள்ளி
14. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மே.நி.பள்ளி, பெரம்பலூர்
15. புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக்கூடம், சி.இ.ஓ., அலுவலகம் அருகில், புதுக்கோட்டை
16. ராமநாதபுரம் சையது அம்மாள் மே.நி.பள்ளி, ராமநாதபுரம்
17. சேலம் சிறுமலர் மே.நி.பள்ளி, நான்கு ரோடு
18. சிவகங்கை சி.இ.ஓ., அலுவலகம்
19. தஞ்சாவூர் எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., அலுவலகம்
20. நீலகிரி சி.இ.ஓ., அலுவலகம்
21. தேனி சி.இ.ஓ., அலுவலகம்
22. திருவண்ணாமலை சி.இ.ஓ., அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மே.நி.பள்ளி வளாகம்
23. திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மே.நி.பள்ளி, திருவாரூர்
24. திருவள்ளூர் ஸ்ரீலட்சுமி மே.நி.பள்ளி, திருவள்ளூர்
25. திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மே.நி.பள்ளி, திருப்பூர்
26. திருச்சி அரசு சையத் முதுசா மே.நி.பள்ளி, திருச்சி-8
27. நெல்லை சேப்டர் மே.நி.பள்ளி, நெல்லை மாநகரம்
28. தூத்துக்குடி சி.இ.ஓ., சீ.வா.அரசு மே.நி.பள்ளி வளாகம், தூத்துக்குடி
29. வேலூர் சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
30. விழுப்புரம் சி.இ.ஓ., அலுவலகம்
31. விருதுநகர் கே.வி.எஸ்.மெட்ரிக் பள்ளி, விருதுநகர்
32. அரியலூர் அரசு மே.நி.பள்ளி, அரியலூர்
***

பட்டதாரி ஆசிரியர்

இன்று: மாவட்டத்திற்குள்
நாளை: வெளி மாவட்டங்கள்
இடைநிலை ஆசிரியர்-11ம் தேதி
காலை: மாவட்டத்திற்குள்
பிற்பகல்: வெளி மாவட்டங்கள்

COUNSELING INSTRUCTION

CLICK HERE TO DOWNLOAD

இடைநிலை அசிரியர்கள் தாங்கள் வேலைவாய்பினை பதிவு செய்துள்ள மாவட்டத்தில்  ஆன்-லைன் கவுன்சிலின்க் கலந்துகொள்ள வேனண்டும்

FITTNESS CERTIFICATE FORM

It may needed you have to produce PHYSICAL FITNESS CERTIFICATE  on joining download here
CLICK HERE TO DOWNLOAD
கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டியவர்கள் 
1. உண்மை சான்றுகள் (ORGINAL CERTIFICATES), 
2. இரண்டு புகைப்படங்கள்(PASSPORT SIZE PHOTOS), .
3. 2 செட் சான்றிதழ்கள்(XEROX) கொண்டு செல்லவும்.

பல்வேறு நெருக்குதல்கள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட உயர்நீதி மன்ற வழக்கு 10.12.12 அன்று விசாரணைக்கு வருகிறது

இடைநிலை ஆசிரியர் நியமன ஆன்லைன் கவுன்சிலிங்க் செயல்முறைகள்

சனி, 8 டிசம்பர், 2012

புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம்: ஆன்-லைன் கலந்தாய்வு


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை அன்று ஆன்-லைன் மூலம் பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கே.தேவராஜன் அறிவித்துள்ளார்.
அதேபோல், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (டிச.11) ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் தாங்கள் அளித்துள்ள வீட்டு முகவரியைச் சார்ந்த மாவட்டத்தில் நடைபெறும் ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும்.
அந்தந்த மாவட்டத்துக்குள் நியமனம் கோருபவர்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். அந்தந்த மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் இல்லாததால் நியமன ஆணை பெற இயலாதவர்கள் மற்றும் பிற மாவட்டத்திற்கு பணி நியமனம் கோருபவர்கள் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு ஆன்-லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என தேவராஜன் அறிவித்துள்ளார்.
15 ஆயிரம் காலியிடங்கள்: அரசு மேல்நிலை, உயர் நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் புதிய பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் கோரலாம். காலியிட விவரங்களில் அந்தந்த மாவட்டங்களில் கலந்தாய்வு நடைபெறும் இடங்களில் ஒட்டப்பட்டிருக்கும்.
பணியிடங்களைத் தேர்வு செய்த பிறகு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் சென்னையில் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைநிலை ஆசிரியர்களுக்கு...
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள 9,600 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆன்-லைன் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடைபெறும் இடங்களிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் தெரிவித்தார்.
இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மிகவும் குறைவு என்பதால் இந்தக் கலந்தாய்வு விரைவாக முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வில் பணியிடங்களைத் தேர்ந்தெடுக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் 13-ம் தேதி விழாவில்தான் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன.

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு


18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன உத்தரவு, 13ந் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் முதல்வர் வழங்குகிறார், முன்னதாக ஆசிரியர்கள் ஆன்லைன் வழியாக பணியிடங்களை தேர்வு செய்ய உத்தரவு.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட 18 ஆயிரத்து 382 ஆசிரியர்களுக்கு சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் வரும் 13-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறும் விழாவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் மாலை, 4:00 மணிக்கு இந்த விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு, மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களில் 18,382 பேர் ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 9,664 இடைநிலை ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்கள் தொடக்கக் கல்வித் துறையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித் துறையிலும் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

பள்ளிக் கல்வித் துறையில் முதல்முறையாக 18 ஆயிரம் பேருக்கு மொத்தமாக இப்போதுதான் பணி நியமனம் வழங்கப்படுகிறது. எனவே, இந்த விழாவை முதல்வர் தலைமையில் நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர், இயக்குநர் ஆகியோரின் மேற்பார்வையில் இணை இயக்குநர்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வரவேற்புக் குழு, இருக்கை வசதிகளை ஏற்படுத்தும் குழு, உணவு மற்றும் தங்கும் வசதிகளை செய்யும் குழு என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அதிகாரிகள் அனைவரும் நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்துக்கு நேரில் சென்று விழாவுக்குச் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினர்.

இந்த விழா தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறியது:

புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்குவதற்காக மாவட்ட வாரியாக உள்ள காலிப்பணியிடங்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் ஓரிரு நாளில் தொகுக்கப்படும். விழாவுக்கு முன்னதாக ஆன்-லைன் கலந்தாய்வை நடத்தி ஆசிரியர்கள் தங்களின் பணியிடங்களைத் தேர்வுசெய்யுமாறு கேட்டுக்கொள்வோம்.

அதன் பிறகு, முதல்வர் தலைமையில் நடைபெறும் விழாவில், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 18 ஆயிரம் ஆசிரியர்களும் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சமுதாயக் கூடங்கள், திருமணக் கூடங்களில் தங்கவைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

போக்குவரத்துத் துறை, சென்னை மாநகராட்சி ஆகியவற்றுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளனர்.

இந்த விழாவையொட்டி, பள்ளிக் கல்வித் துறையே இப்போது பரபரப்புடன் இயங்கி வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

வியாழன், 6 டிசம்பர், 2012

புதன், 5 டிசம்பர், 2012

FINAL RESULTS TET 2012


நடப்பாண்டில் நிரப்ப பட வேண்டிய இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்
  1. 2010-2011-                   1,743
  2. 2011-2012-                   1,886+3,565
  3. 2012-2013-                   3,378

                                           TOTAL 10,557.
ஆயினும் 1743 பணியிடங்கள் குறித்த வழக்குகள் உயர்/உச்ச நீதிமன்றங்க்களில் நிலுவையில் இருப்பதால் அவற்றை தகுதித் தேர்வு மூலம் நிரப்ப இயலாது.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களில் 18,382 பேர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 9,664 பேர் இடைநிலை ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1,567 பேர் தகுதி பெறவில்லை.

இந்தத் தேர்வுகளில் தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதிப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ஜ்ஜ்ஜ்.ற்ழ்க்ஷ.ற்ய்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை மாதம் நடைபெற்றது. மொத்தம் 6.60 லட்சம் பேர் எழுதிய இந்தத் தேர்வில் 2,448 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

தமிழகத்தில் 19 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 9 ஆயிரத்துக்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, மீதமுள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இந்தத் தேர்வில் தேர்ச்சிப் பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கவும் அக்டோபர் 14-ம் தேதி ஆசிரியர் தகுதி மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த மறுதேர்வு முடிவுகள் நவம்பர் 2-ம் தேதி வெளியிடப்பட்டன. மறுதேர்வில் 19,243 பேர் (புதுச்சேரியையும் சேர்த்து) வெற்றி பெற்றனர். மறுதேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு நவம்பர் 6 முதல் 9 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. அதன்பிறகு, தகுதித் தேர்வு மற்றும் மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான இறுதிப்பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்றது.

ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் 1,416 பேரும், இரண்டாம் தாளில் 649 பேரும் பணி நியமனத்துக்கு தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டனர். மறுதேர்வில் முதல் தாளில் 9,205 பேரும், இரண்டாம் தாளில் 8,703 பேரும் ஆசிரியர் நியமனத்துக்கு தகுதியானவர்களாக இருந்தனர். இரண்டுத் தேர்வுகளையும் சேர்த்து மொத்தம் 19,343 பேர் ஆசிரியர் நியமனத்துக்குத் தகுதியானவர்களாக இருந்தனர்.

இதில் 956 பேர் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் என இரண்டுக்கும் தகுதி பெற்றிருந்தனர். அவர்கள் விருப்பம் தெரிவித்தவாறு ஏதேனும் ஒரு பணிக்கு மட்டும் அவர்களின் பெயர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டன. 5 பேர் தகுதிச் சான்றிதழ் மட்டுமே போதும் என்று தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து 18,382 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 9,664 பேர் இடைநிலை ஆசிரியர்களாகவும், 8,718 பேர் பட்டதாரி ஆசிரியர்களாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைகளில் சில நாள்களில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் எனத் தெரிகிறது. பணி நியமனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற 2 ஆயிரம் பேருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் எப்போது? முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியிடுவதில் நீதிமன்ற வழக்குகள் உள்பட சில பிரச்னைகள் உள்ளன. இவை சரிசெய்யப்பட்டதும் உடனடியாக தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வு வாரியத்தின் அதிவேகம்: ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14-ம் தேதிதான் நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியம் அதிவேகமாகச் செயல்பட்டு நவம்பர் 2-ம் தேதியே தேர்வு முடிவை அறிவித்தது. இப்போது இறுதிப்பட்டியலும் தயாராகி, வெற்றி பெற்றவர்களுக்கு வேலையும் கிடைக்க உள்ளது. வெறும் 18 அலுவலர்கள், ஊழியர்களுடன் செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வேகம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி

இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளின் இரண்டாம் தாளில் போதிய எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி பெறாததால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இப்போது தமிழகத்தில் மொத்தம் 19,432 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.

பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், காலிப்பணியிடங்கள் விவரம்:



பாடம்  முந்தைய காலியிடங்கள்  தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள்  இப்போதைய காலியிடங்கள்

1. தமிழ் 2,298 1,815 483

2. ஆங்கிலம் 4,826 3001 1,825

3. கணிதம் 2,664 1,365 1,299

4. இயற்பியல் 1,454 410 1,044

5. வேதியியல் 1,453 643 810

6. தாவரவியல் 625 62 563

7. விலங்கியல் 622 74 548

8. வரலாறு 4,304 1,182 3,122

9. புவியியல் 1,076 75 1,001

10. சிறுபான்மையின

மொழிப்பாடங்கள் 110 91 19

மொத்தம் 19,432 8,718 10,714

செவ்வாய், 4 டிசம்பர், 2012

07-12-2012 அன்று ஒரு முக்கியமான வழக்கு விசரானைக்கு வருகிறது. நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்கிறோம்...

தொடந்து பாருங்கள் .

ஆசிரியர் பணிக்கு தகுதியானவர் பட்டியல் இன்று வெளியாகும்


உயர் நீதிமன்ற உத்தர வின் பேரில் 2வது ஆசிரியர் தகுதி தேர்வு கடந்த அக்டோபர் 14ம் தேதி நடந்தது. இதில் 2 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் முதல்தாளும், 3 லட்சத்து 77 ஆயிரத்து 973 பேர் 2ம் தாளும் எழுதினர்.
இதையடுத்து கீ&ஆன்சர், ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. அடுத்த ஒரு வாரத்தில் 400 ஆட்சேபணை மனுக்கள் வந்தன. அவற்றின் மீது வல்லுநர் குழு ஆய்வு செய்தது. இதற்கிடையே ஆசிரியர் தகுதித் தேர்வு கீ&ஆன்சரில் ஏற்பட்ட குறைகள் குறித்து சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை நடக்கிறது.
இதன் காரணமாக ஆசிரியர் பணிக்கு தகுதி உடையவர்கள் பட்டியல் தயாரிப்பதில் இழுபறி ஏற்பட்டு வந்தது.
ஆனால், ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்களை நியமிக்க, வெயிட்டேஜ் போடும் குழு கடந்த 20 நாளாக சான்று சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு வெயிட்டேஜ் போடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த பணி முடியும் தறுவாயில் உள்ளது.
அதனால் இன்று மாலை அல்லது நாளை மாலை இறுதி பட்டியல் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது.
?

திங்கள், 3 டிசம்பர், 2012

நமது இணையதளத்தினை தினமும் பார்வையிடும் தங்களுக்கு மனதார்ந்த நன்றி.

Click Down to know Statistics


ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை


ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை, மூன்று நபர் குழு அறிக்கை உடனடியாக வெளியிட வேண்டும் - ஆசிரியர் கூட்டணி
ஆசிரியர் தகுதி தேர்வு முறையை கைவிட வேண்டும்' என, தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. கோவை தாமஸ் கிளப்பில், தமிழக ஆசிரியர் கூட்டணி சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர் சம்பத்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட, மாநில நிர்வாகிகள் பேசினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஒரு நபர்க்குழு ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக ஏற்படுத்தப்பட்ட மூன்று பேர் கொண்ட குறைதீர் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய மாற்றத்தை, மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு நடத்துவதை ரத்து செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமைப்படி ஆசிரியர்களை நியமனம் செய்து, கல்வி உரிமை சட்டப்படி ஐந்து ஆண்டுகளுக்குள், அவர்கள் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கு நிபந்தனை விதிக்கலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணை கணக்கில் கொண்டு, 40 மதிப்பெண் வழங்குவதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமைபடி நியமனம் செய்ய வேண்டும், தகுதி தேர்வு முறையை கைவிட வேண்டும். ஒன்று முதல் 4ம் வகுப்பு வரையிலும் செயல்வழி கற்றல் முறையை கைவிட்டு, பாடப்புத்தகத்தை கொண்டு, பாடம் நடத்துவதற்கு பள்ளிக் கல்வி துறைக்கு உத்தரவிட வேண்டும். முப்பருவ தேர்வு முறையில், செய்முறை மதிப்பிடல் முறையை கைவிட வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

"ஆன்-லைன்' முறைக்கு வரவேற்பு

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின், அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறுகையில், ""பள்ளி கல்வித்துறைக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களை நியமனம் செய்யப்படுகின்றனர்.
முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள்,சிறப்பு ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனங்களை "ஆன்-லைன்' மூலம், ஊழலற்ற முறையில் நியமனம் செய்யும் அரசின் கொள்கை முடிவுக்கும், பதவி உயர்வை "ஆன்-லைன்' முறைப்படுத்துவதற்கும் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்,'' என்றார்.

சனி, 1 டிசம்பர், 2012

உச்சநீதிமன்ற வழக்கு நிலவரம்

SUPREME COURT OF INDIA
Case StatusStatus : PENDING
 
Status of Special Leave Petition (Civil)    31042    OF   2012
 
R. RAJMOHAN   .Vs.   ADDL. CHIEF SEC. TO GOVT. & ORS.
 
Pet. Adv. : MR. VINODH KANNA B.
 
Subject Category : SERVICE MATTERS RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT


 
Listed 1 times earlier                                                             Next Date of listing is : 14/12/2012
 
Last updated on Nov 30 2012Click Here for Latest Order
   
 
NIC

ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் சேகரிக்கும் பணி தொடங்கியது - ஓரிரு வாரங்களில் பணியிட விவரம் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடத்த வாய்ப்புள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்ச்சி அடைந்த ஆசிரியர்களுக்கு பணியிடங்களை ஒதுக்க காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் எவை எவை என்பது குறித்த இறுதி பட்டியலை கல்வித்துறை அதிகாரிகள் முழு வீச்சில் திரட்டி வருகின்றனர்.
முதலில் 5800 என்று அறிவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் பின்பு 7500 என்று கூறப்பட்டது இது இறுதியாக எந்த தொகையை வந்து அடையும் என்பது இறுதி செய்யப்பட்ட காலிபணியிடங்களின் கணக்கெடுப்பிற்கு பிறகே தெரியவரும்.

இந்த நிலையில் TRB ஐ தொடர்பு கொண்டு வினவியவர்கள் கூறியதன் வாயிலாக இந்த மாதம் இறுதிக்குள் காலிபணியிட விவரங்கள் வெளியிடப்பட்டு அடுத்த மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போதுதான் காலிபணியிட விவரங்கள் திரட்டும் பணி நடைபெற்று வருவதால் ஒரு வாரம் காலதாமதமாகவே  இந்த பணிகள் நடைபெறும் என்பது ஊகிக்க முடிகிறது.

TET பற்றிய பலரும் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆர்பாட்டங்களை நடத்திவரும் வேலையில் பணியிட ஒதுக்கீட்டு கலந்தாய்வு இன்னும் ஓரிரு வாரங்களில் தொடங்கும் என்றும் பணியிடங்கள் அனைத்தும் சனவரி மாதத்தில் நிரப்பப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு முறையும் பணியிடங்களை நிரப்புவது சனவரி மாதத்தில் தான் நடைபெறுவதால் இந்த முறையும் சனவரி மாத்தில் பணியிடங்கள் நிரப்புதல் நடைபெறும் என்று கூறப்படுகிறது

வெள்ளி, 30 நவம்பர், 2012

வெற்றி மிக வரைவில் !

நமது உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற வழக்குகளின் நெருக்குதல்கள் காரணமாக 1743  இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை சீனியாரிட்டி அடிப்படையில் நிரப்ப வேண்டிய இக்கட்டான சூழலுக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நமக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்பது நிச்சயம்.

வியாழன், 29 நவம்பர், 2012


டி.இ.டி., இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடுவதில், தொடர்ந்து இழுபறி 
நிலை நிலவுவதால், தேர்வு பெற்றவர்கள், தவியாய் தவித்து வருகின்றனர். 
இதுமட்டுமின்றி பாட வாரியாக உள்ள ஆசிரியர் காலி இடங்களையும், பள்ளி 
கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற்றதும், மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தகுதி வாய்ந்த ஆசிரியரை தேர்வு செய்ய, முதலில் டி.ஆர்.பி., திட்டமிட்டிருந்தது. சென்னை, ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், "டி.இ.டி., தேர்வு, ஒரு தகுதித் தேர்வே; அதன்பின், ஆசிரியரை தேர்வு செய்ய, வேறொரு விதிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பிளஸ் 2, பட்டப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு, பி.எட்., ஆகியவற்றுக்கு, 40 மதிப்பெண், டி.இ.டி., தேர்வுக்கு, 60 மதிப்பெண் என, 100 மதிப்பெண் கணக்கிட்டு, அதனடிப்படையில், தகுதியான ஆசிரியரை தேர்வு செய்யும் புதிய முறையை, தமிழக அரசு அறிவித்தது.
ஜூலையில் தேர்வு பெற்ற, 2,448 பேர் மற்றும் அக்டோபரில் தேர்வு பெற்ற, 19 ஆயிரம் பேருக்கும், புதிய தேர்வு முறை கணக்கிடப்பட்டு, அதனடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. அக்., தேர்வில் தேர்வு பெற்றவர்களில், 2 சதவீதம் பேர், தகுதி இல்லாதவர்களாக இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்ததால், தேர்வு பெற்றவர்கள் மத்தியில், பீதி நிலவி வருகிறது.
இதனால், இறுதி தேர்வுப் பட்டியலை, ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 26ம் தேதி, பட்டியல் வெளியாகும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால், தற்போது, எந்த தகவலையும் வெளியிடாமல், "பணிகள் நடக்கின்றன; விரைவில் வெளியிடுவோம்" என, தொடர்ந்து கூறி வருகின்றன.
இதுதொடர்பாக, ஏராளமானோர் தினமும், டி.ஆர்.பி., அலுவலகத்திற்கும், பத்திரிகை அலுவலகங்களுக்கும் போன் செய்து, கேட்டபடி உள்ளனர். ஆனால், டி.ஆர்.பி., அதிகாரிகள், தொடர்ந்து மவுனம் காக்கின்றனர். இது, தேர்வு பெற்றவர்கள் மத்தியில், மேலும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
தகுதி வாய்ந்தவர்களின் பட்டியலை, வெளிப்படையாக வெளியிட, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாட வாரியாக உள்ள காலி இடங்கள் பட்டியலை, பள்ளி கல்வித்துறை, இப்போதே, இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், தேர்வு பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தகுதி தேர்வு ரத்துகோரி அசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


தஞ்சை, :ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.
தஞ்சையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். 6 வது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். 50 சதவீதத்திற்கு அதிகமாக அகவிலைப்படி உயர்ந்தால் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து மீதியை அகவிலைப்படியாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும், உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநில முதன்மை செயலாளர் சுப்ரமணியன், விதிமுறைக்குழு உறுப்பினர் சாமி.சம்பத்குமார்,  மாவட்ட தலைவர் திருமேனி, துணை செயலாளர் கிட்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சனி, 24 நவம்பர், 2012


ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி.,

"அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும்' என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.இது குறித்து, துறை வட்டாரங்கள் கூறியதாவது:டி.இ.டி., தேர்வு வழியாக, தற்போது, 25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆண்டுதோறும், ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், புதிய மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, ஆசிரியர் பணியிடங்கள் என, ஆண்டுதோறும், புதிய ஆசிரியர் நியமன எண்ணிக்கை, கணிசமாகவே இருக்கும்.பட்டதாரி ஆசிரியரில், தமிழ், வரலாறு, அறிவியல் பாடங்களில் படித்தவர்கள், எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர்.

ஆனால், ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்கு, தேவை அதிகமாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மட்டும், 15 ஆயிரத்திற்கும் அதிகமாக தேவைப்படுவர்.எனவே, பி.ஏ., - பி.எட்., ஆங்கிலம் படிப்பவர்கள், எளிதாக, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன், உடனடியாக வேலை வாய்ப்பையும் பெற முடியும்.இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

கணக்கு பட்டதாரிகள் தேவை பற்றிய புள்ளிவிவரம் தரப்படவில்லை. ஆனால், முதுகலை கணக்கு பட்டதாரிகள் ஆசிரியர்கள் தேவையும் அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, 10 ஆயிரம் முதல், 15 ஆயிரம் ஆசிரியர் வரை, புதிதாக நியமிக்கப்படுகின்றனர். வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது

மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் சலுகையானது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது???

*ஏன் இந்தப் பாகுபாடு? ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த கட்டுரை.
ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் எந்த ஒரு போட்டித் தேர்விற்கும் சாதி வாரியாக அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை  வழங்குவது வழக்கம். மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் சலுகையானது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது என்று குரல் எழுப்பியுள்ளனர் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள்.

கட்டாய கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, நாடு முழுவதும் செயல்படும் பள்ளிகளில் கல்வியின் தரம் உயரவேண்டும் என்பதற்காக, ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யவேண்டும் என்று, மத்திய அரசு அறிவித்தது. ஆசிரியர்களை தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யும் பொறுப்பை என்.சி.டி.இ. (நேஷனல் கவுன்சில் ஃபார் டீச்சர் எக்ஸாமினேஷன்) யிடம் ஒப்படைத்தது மத்திய அரசு.

அதன்படி
என்.சி.டி.இ., ஒவ்வொரு மாநிலமும் தங்கள்  பள்ளிகளில் ஆசிரியர்களை பணியில் அமர்த்த, மாநில அளவிலான தகுதித் தேர்வை நடத்த வேண்டும். மத்திய அரசு நடத்தும் மற்ற போட்டித் தேர்வில் அளிக்கப்படும் ஒதுக்கீட்டுக் கொள்கைகள் இந்தத் தேர்விலும் கடைப்பிடிக்கப்படும். அதே நேரத்தில் ஒதுக்கீட்டு விதிகளைத் தளர்த்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் அறிவித்திருந்தது. அதாவது பொதுப் பிரிவினருக்கான  அடிப்படைத் தகுதி மதிப்பெண்கள் 60 சதவீதமாக இருக்கும்போது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்களுக்கு, தகுதி மதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படும் என்பதுதான் அந்த ஒதுக்கீட்டுக் கொள்கை. அந்த அடிப்படையில் மதிப்பெண்களில் 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தளர்வு அளிக்க  மாநில அரசுகளுக்கு அதிகாரங்களை அளித்தது என்.சி.டி.இ.

மத்திய அரசின் போட்டித் தேர்வுக் கொள்கைகளையும், என்.சி.டி.இ. அறிவித்துள்ள மதிப்பெண் தளர்வுகளையும் தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்களின் கேள்வி.

இது குறித்து ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, முதல் முறையாக ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு வெளியானபோது, பாடத்திட்டம், கட்டணம் செலுத்தும் முறை குறிப்பிடப்பட்டிருந்ததே தவிர மதிப்பெண் தளர்வு குறித்து எந்தவொரு அறிவிப்பையும்  தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கவில்லை. ஒருவேளை  ஆசிரியர் தகுதித் தேர்வு முடியும் தருவாயில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். அதுவும் நடக்கவில்லை. ஆந்திர மாநிலத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினப் பிரிவு மாணவர்களுக்கு அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் தளர்வு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஸ்லெட் மற்றும் நெட் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான அடிப்படை மதிப்பெண்ணில் தளர்வுச் சலுகை அளிக்கப்படுகிறது. கல்லூரி ஆசிரியர்கள் தேர்விற்கே ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண்கள் தளர்வு அளிக்கும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் தமிழகம் பாரபட்சம் பார்ப்பது ஏன் என்று புரியவில்லை" என்கின்றனர்.

இதுகுறித்து ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதிய விழுப்புரத்தைச் சேர்ந்த ஆசிரியை சங்கீதா கூறும்போது, நான் அருந்ததியினர் பிரிவைச் சேர்ந்தவள். தற்போது ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதியிருக்கிறேன். அரசு வெளியிட்டுள்ள விடைகளையும், தேர்வில் நான் அளித்த விடைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 88 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். ஆனால், அடிப்படைத் தகுதி மதிப்பெண்ணோ 90. என்.சி.டி.இ. அறிவித்துள்ள ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண்ணில் தளர்வு அளிக்கப்படும் பட்சத்தில் 88 மதிப்பெண்ணானது என் பணியை உறுதி செய்துவிடும்" என்றார்.

தற்போது நடந்து முடிந்துள்ள தேர்விற்கு என்.சி.டி.இ. அறிவித்துள்ள மதிப்பெண் தளர்வுச் சலுகை மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் தற்போது தேர்வு எழுதியிருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கை

வியாழன், 22 நவம்பர், 2012

தகுதிதேர்வின் அடிப்படையில் நடைபெற இருக்கும் இடைநிலை அசிரியர் பணி நியமனத்திற்கு காலிப் பணியிடங்கள் பட்டியல் தயாரிக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. சட்ட ரீதியான சிக்கல்கள் இல்லையெனில் டிசெம்பர் இறுதிக்குள் நியமன பணிகள் நிறைவு பெரும்.

திங்கள், 19 நவம்பர், 2012


தகுதிதான் அடிப்படை!

First Published : 19 November 2012 02:15 AM IST
ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.
ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக இல்லை.
வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை "தகுதித் தேர்வு' என்று அழைக்கிறார்கள்.
இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.
இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது.
மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?
அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.
இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.
இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.
தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.
மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.
காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?
ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?

ஞாயிறு, 18 நவம்பர், 2012

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: ஒரு வாரத்துக்குள் இறுதி தேர்வுப் பட்டியல்


ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 6.56 லட்சம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில், 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 6,7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் உரிய தகுதியுடையவர்களின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இறுதித் தேர்வுப் பட்டியல் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 20,525 பட்டதாரி ஆசிரியர்களும், 7,500 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட இருந்தனர். ஆனால், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வெள்ளி, 16 நவம்பர், 2012

1743 இடைநிலை ஆசிரியர்களை சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் செய்ய கோரி நாம் தொடர்ந்த வழக்கில் வரும் 29-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதி மன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் காலியிட பட்டியல் வெளியிடப்படுமா?

இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் காலியிட பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட வேண்டும் என, டிஇடி, தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

டிஇடி, தேர்வு வழியாக, 25 ஆயிரம் ஆசிரியர் தேர்வு செய்யப்படுகின்றனர். ஜூலையில் நடந்த டிஇடி, தேர்வில், 2,448 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அக், 14ல் நடந்த, அடுத்த தேர்வில், 19 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில், முதலில், 2,448 பேர், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். அடுத்ததாக, 19 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்படுவர். மேலும், 2,900 முதுகலை ஆசிரியரும், விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

பாட வாரியாக உள்ள மொத்த பணியிடங்களின் எண்ணிக்கையை, டிஆர்பி, வெளியிடாமல் உள்ளது. மேலும், மாவட்ட வாரியாக உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களின் பட்டியலை, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வெளியிடவில்லை.

காலியிடங்கள் விவரங்களை, இணையதளத்தில், இரு துறைகளும் வெளியிட்டால், இப்போதே, தங்களுக்கு ஏற்ற இடங்களை தேர்வு செய்ய வசதியாக இருக்கும் என, ஆசிரியர் பணிக்கு தேர்வு பெற்றவர்கள் கருதுகின்றனர்.

இடைநிலை ஆசிரியர், பதிவுமூப்பு அடிப்படையிலும், இதர வகை ஆசிரியர்கள், மதிப்பெண் அடிப்படையிலும் நியமிக்கப்பட உள்ளனர். அதனால், காலியிட பட்டியலை வெளியிட்டால், தகுதி வரிசைப்படி, எந்த இடங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை, இப்போதே தெரிந்துகொள்ள முடியும் எனவும், அவர்கள் தெரிவிக்கின்றனர்.

வழக்கமாக, கலந்தாய்வு நடக்கும் இடத்தில், ஒரு மணி நேரம் முன்பு, காலி பட்டியல் வெளியிடப்படுகிறது. இதனால், பட்டியலை பார்ப்பதற்கு, தேர்வு பெற்றவர்கள், முட்டி மோதும் நிலை இருக்கிறது. 

சமீபகாலமாக, "ஆன்-லைன்' வழியாக, கலந்தாய்வு நடந்து வருவது, மேற்கண்ட பிரச்னையை தீர்க்கும் என்றாலும், காலியிட பட்டியலை, இப்போதே வெளியிட வேண்டும் என்பது, தேர்வு பெற்றவர்களின் கோரிக்கையாக உள்ளது

இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரம் கூறுகையில், "காலியிட விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முழுமையான விவரங்கள் கிடைத்ததும், இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்&' என்று தெரிவித்தன

வெள்ளி, 9 நவம்பர், 2012

பணியிலிருக்கும் ஆசிரியர்களும் தகுதித்தேர்வினை எழுத வேண்டும் என் தொடரப்பட்ட வ்ழக்கில் 3 வார காலத்தில் பதிலளிக்க வேண்டும் என தமிழக, மத்திய அரசுக்ளுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது

செவ்வாய், 6 நவம்பர், 2012

      1743 இடைநிலை ஆசிரியர்களை சீனியாரிட்டி அடிப்படையில் நியமிக்க கோரி நாம் தொடர்ந்த வழக்கில் விரைவில் பதிலலலிக்குமாறு அரசுக்கு தலைமை நீதிபதி திரு.இக்பால் அவர்கள் உத்தரவிட்டார்கள்.

     பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்ந்த மறுசீராய்வு மனு தலைமை நீதிபதி திரு.இக்பால் அவர்க்ள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது, மனுதாரர்கள் சார்பில் திருமதி.நளினி சிதம்பரம், 23.08.2010க்கு முன்னர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் வழங்க்க வேண்டும் என வாதிட்டார். பதில் மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012


ஆசிரியர் தகுதி மறுதேர்வு: சான்றிதழ் சரிபார்ப்பை கண்காணிக்க 17 அதிகாரிகள் நியமனம்

ஆசிரியர் தகுதி மறுதேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. முதல் தாளில் 10,397 பேரும், இரண்டாம் தாளில் 8,849 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.
மொத்தமாக 19,246 பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அந்தந்த மாவட்டங்களிலேயே நடைபெற உள்ளது. நவம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், 8, 9 தேதிகளில் முதல் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெறுகிறது.
முதல் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களாக பணி நியமனம் வழங்கப்படுகிறது. இரண்டாம் தாளில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்காரணமாக, சான்றிதழ் சரிபார்ப்பு முக்கியத்துவம் பெறுவதால் அதைக் கண்காணிக்க 17 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இணையதளத்தில் அழைப்புக் கடிதங்கள்: ஒவ்வொரு தேர்வருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்படாது. ஒவ்வொரு தேர்வரும், வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாகப் படித்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்களையும், அவற்றின் இரண்டு நகல்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டுவர வேண்டும்.
முதல் தாளில் வெற்றிபெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது, அசல் சான்றிதழ்களுடன் புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட பதிவு சான்றிதழின் இரு நகல்கள் ஆகியவற்றை உடன் கொண்டுவர வேண்டும்.
இது தொடர்பாக, வேலைவாய்ப்பு இயக்குநரகம் உரிய உத்தரவுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு வழங்கியுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
பெயர் விவரம்
1.  டி.எச்.செந்தமிழ்ச்செல்வி (மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்) - சென்னை
2. ஆர்.இளங்கோவன் (அனைவருக்கும் இடைநிலைக்
கல்வித் திட்ட இயக்குநர்) - கடலூர், விழுப்புரம்  
3. க.அறிவொளி (ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்)
காஞ்சிபுரம், திருவள்ளூர்
4. ஏ.சங்கர் (ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்)
கன்னியாகுமரி, திருநெல்வேலி
5. எஸ்.அன்பழகன் (ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்-செயலர்) - கரூர், திருச்சி
6. ஆர்.பிச்சை (செயலர், தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம்)
- திண்டுக்கல், தேனி
7. கே.தங்கமாரி (தேர்வுத் துறை இணை இயக்குநர்)
- தருமபுரி, கிருஷ்ணகிரி
8. ஏ.கருப்பசாமி (தொடக்கக் கல்வித் துறை இணை இயக்குநர்)
- தூத்துக்குடி, விருதுநகர்
9. எஸ்.சேதுராமவர்மா (ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல்
உறுப்பினர்) - நாமக்கல், சேலம்
10. டி.உமா (ஆசிரியர் தேர்வு வாரிய கூடுதல் உறுப்பினர்)
- மதுரை, ராமநாதபுரம்
11. பி.ஏ. நரேஷ் (அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இணை இயக்குநர்) - கோவை, நீலகிரி
12. சி.உஷாராணி (பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்)
- திருவண்ணாமலை, வேலூர்
13. வி.பாலமுருகன் (மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர்) - ஈரோடு, திருப்பூர்
14. குப்புசாமி (அனைவருக்கும் கல்வித் திட்ட இணை இயக்குநர்)
- தஞ்சாவூர், திருவாரூர்
15. சி.செல்வராஜ் (மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர்) - ஈரோடு, திருப்பூர்
16. பி.ராமராஜ் (முறைசாராக் கல்வி இணை இயக்குநர்)
-  அரியலூர், பெரம்பலூர்
17. எஸ்.ராமானுஜம் (மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இணை இயக்குநர்) - நாகப்பட்டினம்

சனி, 3 நவம்பர், 2012

ஆசிரியர் தகுதி மறுதேர்வு: 3% பேர் மட்டுமே தேர்ச்சி!


ஆசிரியர் தகுதி மறுதேர்வில் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர் தகுதி மறுதேர்வு எழுதிய 6 லட்சத்து 56 ஆயிரத்து 698 பேரில் 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை இரவே வெளியிடப்பட்டன.
தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 6-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.
முதல் தாளை எழுதிய 2 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேரில் 10,397 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாளை எழுதிய 3 லட்சத்து 77 ஆயிரத்து 973 பேரில் 8,849 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதல் தாளில் 3.7 சதவீதம் பேரும், இரண்டாம் தாளில் 2.3 சதவீதம் பேரும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்படுவர்.
தமிழகம் முழுவதும் சுமார் 7,500 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் மட்டுமே உள்ளதால், முதல் தாளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைப்பது கடினம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநிலப் பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படும்.
அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் 20,525 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் உரிய தகுதிகளுடன் இருந்தால் அவர்கள் அனைவருக்கும் பணி கிடைக்க வாய்ப்புள்ளது.
ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 6.7 லட்சம் பேர் எழுதினர். இதில் 2,448 பேர் மட்டுமே (0.36%) தேர்ச்சி பெற்றிருந்தனர். இதையடுத்து 22 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காகவும், தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கவும் ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14-ம் தேதி நடத்தப்பட்டது.
மறுதேர்வில் தேர்வு நேரம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த முறை சுமார் 17 ஆயிரம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 2,246 பேர் தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் முதலில் பணி நியமனம் வழங்கப்படும்.
அதன் பிறகே ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
நவம்பர் 6-ல் சான்றிதழ் சரிபார்ப்பு: ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றிபெற்ற 19,246 பேருக்கும் நவம்பர் 6-ம் தேதி முதல் அந்தந்த மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.
ஒவ்வொரு தேர்வருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான அழைப்புக் கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும். அதில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான நேரம், இடம் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்பட்டிருக்கும். அழைப்புக் கடிதங்கள் தபால் மூலம் அனுப்பப்படாது.
ஒவ்வொரு தேர்வரும் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை கவனமாகப் படித்து, சான்றிதழ் சரிபார்ப்புக்கான படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அனைத்து அசல் சான்றிதழ்களையும், அவற்றின் இரண்டு நகல்களையும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கொண்டுவர வேண்டும்.
முதல் தாளில் வெற்றிபெற்ற தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது, அசல் சான்றிதழ்களுடன் புதுப்பிக்கப்பட்ட வேலைவாய்ப்பு பதிவு சான்றிதழ் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட பதிவு சான்றிதழின் இரு நகல்கள் ஆகியவற்றை உடன் கொண்டுவர வேண்டும்.
இது தொடர்பாக, வேலைவாய்ப்பு இயக்குநரகம் உரிய உத்தரவுகளை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்களுக்கு வழங்கியுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
ஜூனில்தான் அடுத்த தேர்வு: அடுத்த ஆசிரியர் தகுதி தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்ததாக, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனம் உள்ளிட்டப் பணிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ள உள்ளது.
அதன்பிறகு, ஆசிரியர் தேர்வு வாரியத்தை புதுப்பித்து ஆன்-லைன் வழி விண்ணப்பம் உள்ளிட்ட அம்சங்கள் அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே,  வரும் ஜூன் மாதத்தில்தான் அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வாய்ப்புள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மீண்டும் தவறுகள்
ஆசிரியர் தகுதி மறுதேர்விலும் விடைத்தாளில் தேர்வர்கள் பல்வேறு தவறுகளைச் செய்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
வினாத்தாள் எண்ணை விடைத்தாளில் குறிப்பிடாத தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பிட முடியாது என்பதால் அந்த விடைத்தாள்கள் நிராகரிக்கப்பட்டன. அதேநேரத்தில், வினாத்தாள் எண்ணை எழுதிவிட்டு, அதை விடைத்தாளில் "ஷேட்' செய்யாதவர்களின் விடைத்தாள்கள் பரிசீலிக்கப்பட்டன.
விடைத்தாளில் மொழிப்பாடத்தை குறிப்பிடாதவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த மொழிப்பாடத்தின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
அதேபோல், விருப்பப்பாடத்தை எழுதாமலும், "ஷேட்' செய்யாமலும் விட்டிருந்தவர்களுக்கு, அவர்கள் விண்ணப்பங்களில் குறிப்பிட்ட விருப்பப்பாடத்தின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது