தஞ்சை, :ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்பாட்டம் செய்தனர்.
தஞ்சையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆசிரியர் தகுதி தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். 6 வது ஊதியக்குழு பரிந்துரையின்படி மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். 50 சதவீதத்திற்கு அதிகமாக அகவிலைப்படி உயர்ந்தால் 50 சதவீதத்தை ஊதியத்துடன் இணைத்து மீதியை அகவிலைப்படியாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும், உள்ளிட்ட, 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாநில முதன்மை செயலாளர் சுப்ரமணியன், விதிமுறைக்குழு உறுப்பினர் சாமி.சம்பத்குமார், மாவட்ட தலைவர் திருமேனி, துணை செயலாளர் கிட்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.