அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு ஒரு வாரமாக புத்தாக்கப் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன. மேலும், இயலாக் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பயிற்சிகளும், இன்று(ஜன.,31) வரை நடக்கிறது.இதுதவிர, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் சார்பிலும் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, 10 நாட்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் நடக்க உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச்சில் பொது தேர்வும், பிப்.,2வது வாரம் முதல் செய்முறை தேர்வுகளும் துவங்கவுள்ளன. பயிற்சி முகாம்களுக்கு அழைக்கப்படும் 80 சதவீதம் ஆசிரியர்கள், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை சொல்லி கொடுப்பதால், அவர்களின் கற்பித்தல் பணிகள் பாதிக்கின்றன.ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், ""பள்ளிகள் துவங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற புத்தாக்க பயிற்சிகளை நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும். அதைவிட்டு, பொதுத் தேர்வுகள் துவங்கும் நேரத்தில் இப்படி "விதவிதமான பெயர்களில்' பயிற்சி முகாம்களை போட்டி போட்டு நடத்தப்படுவது வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும்,'' என்றனர்.