வியாழன், 31 ஜனவரி, 2013

அரசு பொதுத் தேர்வு நெருங்கும் நேரத்தில், ஆசிரியர்களை "பயிற்சி' என்ற பெயரில் அடிக்கடி அழைத்து, "முடக்கப்படுவதால்' கற்பித்தல் பணிகள் பாதிப்பதாக புகார் எழுந்ள்ளது.



அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு கணித ஆசிரியர்களுக்கு ஒரு வாரமாக புத்தாக்கப் பயிற்சி முகாம்கள் நடக்கின்றன. மேலும், இயலாக் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பயிற்சிகளும், இன்று(ஜன.,31) வரை நடக்கிறது.இதுதவிர, அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் சார்பிலும் 6, 7 மற்றும் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு, 10 நாட்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் நடக்க உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச்சில் பொது தேர்வும், பிப்.,2வது வாரம் முதல் செய்முறை தேர்வுகளும் துவங்கவுள்ளன. பயிற்சி முகாம்களுக்கு அழைக்கப்படும் 80 சதவீதம் ஆசிரியர்கள், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை சொல்லி கொடுப்பதால், அவர்களின் கற்பித்தல் பணிகள் பாதிக்கின்றன.ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், ""பள்ளிகள் துவங்கும் நேரத்தில் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற புத்தாக்க பயிற்சிகளை நடத்தினால் பயனுள்ளதாக இருக்கும். அதைவிட்டு, பொதுத் தேர்வுகள் துவங்கும் நேரத்தில் இப்படி "விதவிதமான பெயர்களில்' பயிற்சி முகாம்களை போட்டி போட்டு நடத்தப்படுவது வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும்,'' என்றனர்.

வேலைக்கு படிப்பு போதாது தகுதியும் இருக்க வேண்டும்


தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி, பள்ளி நிர்வாகிகள் பலர் ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தனர். மனுக்களில், எங்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த
காலியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்க அனுமதி கேட்டு மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினோம். ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என கல்வி அதிகாரி உத்தரவிட்டார். அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது.மனுக்களை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் விசாரித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு:தமிழகத்தில் ஆசிரியர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையிலும், பின்னர், மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தி, அதில் வெற்றி பெறுபவர்களை மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது.மாணவர்களுக்கு கட்டாய கல்வி, தரமான கல்வி கொடுக்க வேண்டியது அரசுகளின் கடமை. பதிவு மூப்பு அடிப்படையில் மட்டும் ஆசிரியர்களை நியமிக்கும் போது தகுதியான, தரமான ஆசிரியர்கள் கிடைக்கமாட்டார்கள். தரமான கல்வி அளிக்காத அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத, ஐந்து ஆண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தகுதியற்றவர்களை ஆசிரியர்களாக நியமிக்க முடியாது. ஆசிரியர்கள் தகுதியானவர்களாக இருக்க வேண்டும். கடந்த 1991&92ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை என கோர்ட் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அந்தப் பள்ளிகளில் படித்தவர்கள் பலர் ஆசிரியர்களாக வந்துள்ளனர். 685 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஒவ்வொரு ஆண்டும் 73 ஆயிரம் பேர் படிப்பு முடித்து வெளியே வருகின்றனர். அவர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். அவர்களில் தரமானவர்களை தேர்வு செய்ய தேர்வு கட்டாயம். பட்டம் இருந்தால் மட்டுமே ஒருவரை வேலைக்கு தேர்வு செய்ய முடியாது. அந்த வேலைக்கான தகுதியும் அவருக்கு இருக்க வேண்டும். எனவே, ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்

புதன், 30 ஜனவரி, 2013

பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி : ஜனவரியில் மட்டும் 22 நாட்கள்


அரசு விடுமுறை, பயிற்சி என, ஜனவரியில் 22 நாட்கள், ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. பள்ளிகளில் பருவமுறை கல்வி திட்டத்தில், பாடம் கற்பிக்கின்றனர். மூன்றாம் பருவ வகுப்புகள், ஜன., 2 ல் துவங்கின.
ஜனவரியில், 13 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டது. மேலும், ஆசிரியர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை, அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் 9 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனால், அவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. ஒட்டு மொத்தமாக, 22 நாட்கள் பள்ளிக்கே செல்லவில்லை. இதனால், மூன்றாம் பருவ துவக்கத்திலேயே, பாடம் கற்பிக்க முடியவில்லை. பிப்ரவரி, மார்ச் மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கல்வி அதிகாரிகள் ஆய்வு உள்ளிட்ட பணிகள்
உள்ளன. இதனால், இறுதி தேர்வுக்கு தனிக்கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "இவ்வாண்டு துவக்கத்திலேயே ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்றுவிட்டோம். சனி தோறும், அனைவருக்கும் கல்வி திட்ட பயிற்சி நடக்கிறது. பள்ளிக்குச் செல்வதே அரிதாகி விட்டது. மாணவர்களுக்கு எப்படி பாடம் கற்பிக்க முடியும்' என்றார்.

6,000 புதிய ஆசிரியர்களுக்கு டிசம்பர் சம்பளம் வழங்கப்படவில்லை


புதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000 ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய இடைநிலைக் கல்வி திட்ட நிதி - ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் இருந்து, சம்பளம் வழங்க வேண்டியிருப்பதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த ஆண்டு, டிச., 13ம் தேதி, இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் என, 21 ஆயிரம் ஆசிரியர்கள், புதிதாக நியமிக்கப்பட்டனர். இவர்களில், 6,000 பட்டதாரி ஆசிரியர் தவிர, மற்ற அனைவருக்கும், டிசம்பர் மாதத்தில், பாதி நாள் சம்பளம் வழங்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும், 6,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும், சம்பளம் வழங்கப்படவில்லை என, ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரத்தினர் கூறுகையில், "இவர்களுக்கு சம்பளம் வழங்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். இதனால், சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில், அனைவருக்கும், சம்பளம் வழங்கப்படும்" என்றனர்

பணிவரன் முறைக்காக ஆசிரியர்கள் தவம்


புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களின், சான்றிதழை சரிபார்த்து அனுப்புவதற்கு, கல்வித்துறை அதிகாரிகள் இழுத்தடிப்பதால், பணி வரன்முறை ஊதியம் பெற முடியாமல், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
கல்வித்துறையில், தொடக்க, இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவர்களின், சான்றிதழ் சரிபார்ப்பு, இரு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகிறது.இதன்படி, டிகிரி சான்றிதழ், சம்பந்தப்பட்ட பல்கலைக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ், மாநில தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கும் அனுப்பப்படுகின்றன. பல்கலை அளவில் அனுப்பப்படும் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, உடனே அனுப்பப்படுகிறது. ஆனால், தேர்வுத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பப்படும் சான்றிதழ்கள்,இழுத்தடித்து வழங்கப்படுகிறது. இதனால், ஆசிரியர்கள் பணி வரன்முறைபடுத்துவதில், தாமத நிலை நீடிக்கிறது. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் இன்றி அவதிப்படுகின்றனர்.இவற்றை பெற விரும்பும் ஆசிரியர்கள், செலவு செய்து, சென்னைக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, 10ம் வகுப்பு, பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்க்கும் அதிகாரத்தை, அந்தந்த மாவட்ட, சி.இ.ஓ.,க்களுக்கு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இல்லையேல், அந்தந்த மாவட்டங்களிலேயே, மாற்று ஏற்பாட்டை அரசு மேற்கொள்ள வேண்டும்

திங்கள், 28 ஜனவரி, 2013

பணியில் சேருவதற்கு நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஆசிரியர் பணியில் சேருவதற்கு நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரிய மனுவினை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது. மதுரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தகுதித்தேர்வினை ரத்து செய்யக்கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘‘ஆசிரியர்கள் ஏற்கனவே உரிய பயிற்சியினை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர். அதன் பிறகு அவர்களை பணியில் சேர்க்க தகுதித்தேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இது படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் வேலை வாய்ப்பினை பாதிக்கிறது. எனவே தற்போது தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய நடத்தப்படும் தகுதித்தேர்வினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

அடிப்படை உரிமை

இந்த மனு நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்பாக விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:–குழந்தைகளுக்கு இலவசமாக கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்பது அவர்களுக்கான அடிப்படை உரிமையாக உள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் கலந்து கொண்டனர். இதில் 2 ஆயிரத்து 448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அந்த தேர்வில் கலந்து கொண்டவர்களுக்கு அக்டோபர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அதனை 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் எழுதினர். அதில் 19 ஆயிரத்து 261 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

மனு தள்ளுபடி

அடிப்படை வசதிகள் இல்லாத, முறையாக அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த 1993–ம் ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி ஏராளமான நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்தநிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகுதித்தேர்வு நடத்துவதில் தவறு இல்லை. இந்த தேர்வு அவர்களது வேலை வாய்ப்பினை பாதிக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ள

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து தமிழக அரசு மறு ஆணை வெளியிட தனியார் பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை


அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்ச்சி பற்றி அரசு மறு ஆணை வெளியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழக மாநிலத் தலைவர் ஆ. மரியதாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர் நியமன ஒப்புதல்களை ரத்து செய்ய அரசு ஆணையிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் 23.8.2010-க்கு பின் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தகுதி தேர்வு பெற்றிருந்தால்தான், பணி அமர்த்த ஏற்பு செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆனால் பெரும்பாலான ஆசிரியர் நியமனங்கள் முறையாக ஏற்பளிக்கப்பட்டு ஊதியம் பெற்று வருகின்றனர். இத்தகைய ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த ஆணை 23.8.2010-க்கு முன்பாக வெளியிட்டு இருந்தால் பொருத்தமானதாக இருந்து இருக்கும்.

முன்தேதியில் அமலுக்கு வரும் அந்த ஆணையை மூன்றாண்டுகளுக்குப் பின் அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காலம்தாழ்த்தி வெளியிடப்பட்ட அரசு ஆணை ஆசிரியர் நலனுக்கு எதிரானது.

எனவே, இந்த ஆணைக்கு முன்னதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பொருத்தமான காலக்கெடுவுக்குள் தகுதித் தேர்வில் வெற்றிபெற்று இருக்கவேண்டும் என்ற மறு ஆணையை அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தகுதித் தேர்வில் தோல்வியைத் தழுவும் ஆசிரியர்கள்!


மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 99 சதவீத ஆசிரியர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள் என்ற தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்விச் சட்டப்படி, ஒன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வைக் கட்டாயமாக எழுத வேண்டும். மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ) இந்தத் தகுதித் தேர்வை நடத்துகிறது. தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. 7.95 லட்சம் பேரில் ஒரு சதவீத ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தத் தகுதித் தேர்வு 2011-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து தேர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. பிஎட் பட்டப் படிப்பைத் தரமானதாக்க வேண்டிய எச்சரிக்கை மணி இது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

ஒன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும் ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர்களாகப் பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பணிபுரிய விரும்பும் ஆசிரியர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுத வேண்டும். கடந்த நவம்பரில் சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 9.40 லட்சம் பேர் பதிவு செய்தார்கள். அதில், 7.95 லட்சம் பேர் அத்தேர்வை எழுதினர். அதில் முதல் தாள், இரண்டாம் தாள் அல்லது இரண்டு தாள்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 4,849 மட்டுமே.

முதன் முறையாக 2011-ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 9 சதவீதம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். அதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற இந்தத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 7 சதவீதமாகக் குறைந்து விட்டது. தற்போது இந்தத் தேர்ச்சி விகிதம் ஒரு சதவீதத்துக்கும் குறைந்து விட்டது கல்வியாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கிடையே, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிய பிஎட் பட்டம் பெற்றவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க தில்லி அரசு தீர்மானித்துள்ளது.

தமிழகத்தின் நிலையும் திருப்திகரமாக இல்லை. தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலையில் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதிய 6.60 லட்சம் பேரில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றார்கள். தேர்வு எழுதியவர்களுக்கு நேரம் போதவில்லை போன்ற காரணங்களை அடுத்து, தேர்வு நேரத்தை ஒன்றரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி மறு தேர்வு நடத்தப்பட்டது. ஆனால், அந்தத் தேர்வை எழுதிய 6.56 லட்சம் பேரில் 19,246 பேரே தேர்ச்சி பெற்றனர். மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிப்பதற்காக உள்ள ஆசிரியர்களே, அதற்கான தகுதித் தேர்வில் இந்த அளவுக்குத் தடுமாறினால் என்ன செய்வது?

வெள்ளி, 25 ஜனவரி, 2013


அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்யும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்
கட்டாயக் கல்வி சட்டத்திற்கு எதிராக (ஆர்.டி.இ.,), அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை, டிஸ்மிஸ் செய்யும் முடிவை, கல்வித்துறை, தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
ஒரே நேரத்தில், 2,000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதால், இம்முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, எந்த வகை பள்ளிகளாக இருந்தாலும், 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின் அறிவிப்பு வெளியாகி, அதன் அடிப்படையில் பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி.

ஆனால், மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், 2,000 பேர் வரை சேர்ந்திருக்கலாம் என, கூறப்படுகிறது. இந்த பணி நியமனம், ஆர்.டி.இ., சட்டத்திற்கு எதிரானது என்பதால், இவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய, கல்வித்துறைக்கு, அரசு உத்தரவிட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதன் அடிப்படையில், முதல்கட்டமாக, தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்ய, துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. இந்த தகவல் தெரிந்ததும், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மத்தியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

பணி நீக்க உத்தரவு கடிதங்கள், நேற்று வழங்க இருந்த நிலையில், பிரச்னை குறித்த முழு விவரங்களையும், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து, பணி நீக்க உத்தரவு வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகி தெரிவித்தார்.

இந்த பிரச்னை குறித்து, முழுமையாக ஆய்வு செய்த பின், இறுதி முடிவு எடுக்கப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: முதலில் மேற்கண்ட தேதிக்குப் பின், ஆசிரியர் பணி நியமனம் செய்யக் கூடாது என, சம்பந்தபட்ட துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும்.  இதை, அதிகாரிகள் செய்யவில்லை.

மேலும், ஆசிரியர் நியமனங்களுக்கு, அதிகாரிகள் அனுமதியும் வழங்கி உள்ளனர். இப்படி, ஆரம்பத்தில் நடந்த தவறுகளுக்கு, அதிகாரிகளும் ஒரு காரணமாக உள்ள நிலையில், திடீரென ஆசிரியர்களை மட்டும் பழிவாங்குவது நியாயமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்

ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் விளக்கமளிக்கும் இணையதளம்
ஆங்கிலத்தில் ஒவ்வொரு சொல்லிற்கும் பல விளக்கமளிக்க ஓர் இணையதளம் உள்ளது. இந்த இணையதளம் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவியாக அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளத்தில் ஒரு சொல்லைத் தேர்வு செய்து, அந்த சொல்லிற்கு இணையாக வேறு என்ன சொற்களெல்லாம் இருக்கின்றன? இந்த சொல்லிற்கு எதிர்சொற்கள் (Opposite Word)என்னென்ன இருக்கின்றன? அந்த சொல்லைக் கொண்டு எப்படியெல்லாம் வாக்கியங்கள் (Sentense) அமைக்கலாம்? அந்த சொல்லுக்கு இணையாக (டச்சு - Dutch), (பிரெஞ்ச் - French), (ஜெர்மன் - German), (இத்தாலி - Italian), (போர்ச்சுக்கீசு -  Portuguese), (ஸ்பானிஷ் - Spanish) போன்ற மொழிகளுக்கு மாற்றம் (Translate)செய்து வரும் சொற்கள், இந்த மொழிகளில், குறிப்பிட்ட மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்தால் வரும் சொற்கள், ஒரு சொல்லுக்கு (பன்மைச் சொல் வடிவம் -Plural), (கடந்த காலம் -Past Tense), சொல் அல்லது( நிகழ் காலம் - Present Tense)சொல் என்ன? ஆங்கிலத்திலிருக்கும் அனைத்துச் சொற்களையும் கண்டறியும் வசதி, 2 முதல் 10 எழுத்துக்கள் என எழுத்துக்களைக் கொண்டும் அவை தொடங்கும் அல்லது முடியும் மற்றும் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டும் ஆங்கிலச் சொற்களைக் கண்டறியும் வசதியும் இந்த இணையதளத்தில் உள்ளது. எழுத்துக்களைக் கொண்டு போட்டிக் கேள்விகள் (Quiz)போன்றவையும் தரப்பட்டுள்ளன.

(Dictionary)மற்றும் மொழிமாற்றக் கருவி(Translator)தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் இத்தளத்தில் உள்ளன.
இணையதள முகவரி : http://www.wordhippo.com

ஊதிய முரண்பாடு நீக்கும் குழுவின் பரிந்துரையை நிறைவேற்ற ஆசிரியர் மன்றம் கோரிக்கை

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, ஆசிரியர், அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்றும், பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்றும் அதிமுக வாக்குறுதி அளித்தது.
ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டை நெருங்க உள்ள நிலையில் மேற்கண்ட வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. பின்னர் ஊதிய முரண்பாடுகளை களைய ஐஏஎஸ் அதிகாரி கிருஷ்ணன் தலைமையில் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்த குழு அரசிடம் தனது பரிந்துரையை அளித்தும் இதுவரை முதல்வர் மவுனமாக இருந்து வருகிறார். எனவே அந்த குழுவின் பரிந்துரையை அரசு வெளியிட வேண்டும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி நிதி அறிக்கையின் மீதான விவாதத்தில் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

புதிதாக நியமிக்கப்பட்ட 8000 இடை நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி சுருக்கம்

2012-13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப் பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை நடத்த உத்தரவு.


2012 - 13ஆம் கல்வியாண்டில் புதிதாக நியமிக்கப்பட்ட தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நுழைநிலைப் பயிற்சி (Induction Training) 21.1.13 முதல் 23.1.2013 வரை உண்டு உறைவிடப் பயிற்சியாக நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 8000 இடைநிலை ஆசிரியர்களுக்கு இப்பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 
ஆசிரியர் ஒருவருக்கு ரூ.200 வீதம் 3 நாட்களுக்கு ரூ.600 ஒதுக்கி அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது அந்தந்த மாவட்டத்தில் 4 அல்லது 5 மண்டலங்களாக பிரித்து நடத்தவும், ஒரு சில மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. உண்டு உறைவிடப் பயிற்சி என்பதால் போர்வை, சோப்பு மற்றும் பற்பசை ஆகியவை ஆசிரியர்கள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் அரசின் திட்டங்கள், இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம் 2009 (RTE ACT 2009), ஆசிரியர்களின் பணி, ஆசிரியரின் நடத்தை விதிகள், தேசிய மற்றும் மாநில அளவில் செயல்படும் குழந்தைகள் நல ஆணையம், அரசின் எதிர்பார்ப்புகள், மற்றும் கொள்கைகள், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை, யோகா ஆகியவை பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  

சனி, 19 ஜனவரி, 2013


இப்படியும் ஒரு அதிசய தலைமையாசிரியர்!

"எழுத்தறிவித்தவன் இறைவன்" என்பதற்கு, எடுத்துக்காட்டாய் திகழ்கிறார், மதுரை ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த, தலைமை ஆசிரியர் கில்பர்ட், 47. இவர், அய்யப்பன்நாயக்கன்பட்டி, கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்.
காலை, 9:30 மணிக்கு தான், பள்ளி துவங்கும் என்றாலும், காலை, 8:00 மணிக்கே வந்து விடுகிறார். வகுப்பறையில் பள்ளிக் குழந்தைகள் விட்டுச் சென்ற, காகிதங்கள் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். இப்பணிக்காக, துப்புரவு ஊழியர் வரட்டும் என, காத்திருப்பது கிடையாது.

மாலை, 4:00 மணிக்கு, பள்ளி முடிந்ததும், குழந்தைகள் பயன்படுத்தும் கழிப்பறையை, தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்கிறார். இதுபற்றி அவரிடம், சக ஆசிரியர்கள் வியப்புடன் கேட்கும்போது, "நாம் பெற்றப் பிள்ளைகளுக்கு சுத்தம் செய்கிறோம். இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளும், நம் பிள்ளைகள்தான். குழந்தையும், தெய்வமும் ஒன்றல்லவா!" எனக் கூறி ஆசுவாசப்படுத்துவார்.

எண்ணற்ற ஏழை குழந்தைகளை, சொந்த செலவில் படிக்க வைக்கிறார். இதற்காக, மாதம் ஒரு தொகையை, குடும்ப பட்ஜெட்டில் இருந்து ஒதுக்குகிறார். "எழுத்தறிவித்தவன் இறைவன்" என்பதற்கு எடுத்துக்காட்டாய் திகழும், தலைமை, ஆசிரியர் கில்பர்ட்டின் பணி சிறக்க வாழ்த்துவோம்!

புதன், 16 ஜனவரி, 2013


தேர்வுவாரியம் மூலம் தேர்வான 20,000 ஆசிரியர்களின் பெயர்நீக்கம்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 20 ஆயிரம் பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. இதற்கான பட்டியலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம்
விரைவில் அனுப்ப உள்ளது.  அரசு பணிகளுக்கு அல்லது ஆசிரியர் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவோரின் பட்டியல் மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறைக்கு அனுப்பப்பட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் உள்ள பதிவு மூப்பு பட்டியலில் இருந்து அவர்களின் பெயர்கள் நீக்கப்படும். இவ்வாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக அரசு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் பதவிக்கு தேர்வாவோரின் பட்டியல் மாநில, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.  அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேரவு மூலமாக ஏறத்தாழ 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 3 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணையினை வழங்கினார். பணி நியமன ஆணை பெற்ற பெரும்பாலானோர் பணியில் சேர்ந்து விட்டனர்.  இந்த நிலையில் மேற்கண்ட 20 ஆயிரம் ஆசிரியர்களின் பெயர்களை பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்குவதற்காக அதற்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம், வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. பெயர் நீக்க பட்டியல் கிடைக்கப் பெற்றதும் சம்பந்தப்பட்ட மாநில வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படும். முதுநிலை பட்டாதாரியாக இருந்து பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்ந்தவராக இருந்தால் அவர்களின் துறை தலைவரிடம் இருந்து தடையின்மை சான்று பெற்று முதுநிலை கல்வி தகுதிக்கான பதிவு மூப்பை தக்கவைத்துக் கொள்ளலாம். இதற்கிடையே புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை வாங்குமாறு அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் 
தெரிவித்தன.

தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்: அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.



ஜூன் மாதத்தில் அடுத்த தேர்வு

அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:

இடைநிலை ஆசிரியர்கள் - 2,210

பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

உதவிப் பேராசிரியர்கள் - 1,063

சிறப்பாசிரியர்கள் - 841

நீங்க ரெடியா காலிப்பணியிடம் ரெடி தகுதித் தேர்வுக்கு இனறே தயாராகுங்கள்


12,532 பட்டதாரி ஆசிரியர், 2,210 இ.நி. ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம் நடத்தப்படும் - ஆசிரியர் தேர்வு வாரியம்
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?
ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 84

சனி, 12 ஜனவரி, 2013

OD ன்னு சொல்லி OP அடிக்க முடியாது


பிற பணிக்கு (On Duty) செல்லும் தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்
 பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர், பள்ளி வேலை நாட்களில், பிற பணி என்ற பெயரில், வெளியூர் செல்வதும், சொந்த பணிகளை கவனிப்பதாகவும், அரசின் கவனத்திற்கு புகார் சென்றது. இதனால், அலுவலக பணிகளுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.

பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும். இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும்.

சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளை அறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் வரவழைக்க வேண்டும்.

சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளி அலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம். இந்த விதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது

புதன், 9 ஜனவரி, 2013


ஆசிரியர் தரம் என்ன?

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சி.டி.இ.டி.,) தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது சி.பி.எஸ்.இ., நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மத்திய அரசின் ஆர்.டி.இ., சட்டப்படி, நாட்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியர் பணிகளில் சேர்வதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாநிலங்கள் தனித்தனியாக தேர்வை நடத்துகின்றன . சி.பி.எஸ்.சி.,யும் அதன் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியில் சேர்வதற்கு, மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வை CTET நடத்துகிறது. முடிவுகள் டிச., 27ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 1 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 7 லட்சத்து 96 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இத்தேர்வில் வெறும் 4,849 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.

குறையும் தேர்ச்சி

2011ல், முதன்முறையாக நடந்த முதல் தேர்வில், 9 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து நடத்தப்பட்ட மறுதேர்வில், தேர்ச்சி விகிதம் 7 சதவீதமாக குறைந்தது. தற்போது இது, வெறும் 1 சதவீதமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் நடந்த முதல் டி.இ.டி., தேர்வில் கூட, தேர்ச்சி சதவீதம் ஒன்றைத் தாண்டவில்லை.

ஆசிரியர்களின் தேர்ச்சி விகிதம், தொடர்ந்து குறைந்து வருவது ஆசிரியர்களின் தரத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது. இருப்பினும் தகுதித்தேர்வை வைத்து மட்டுமே, ஆசிரியர்களின் தரத்தை நிர்ணயித்து விட முடியாது என ஒரு தரப்பு கூறுவதிலும் நியாயம் இருக்கிறது. ஆனால் இதிலிருந்து ஒரு கருத்து மட்டும் தெளிவாகிறது. ஆசிரியர் பயிற்சி படிப்புகளின் நிலை எந்தளவுக்கு இருக்கிறது என்பதை இது வெளிக்காட்டுகிறது.

எனவே பி.எட்., மற்றும் D.T.Ed., படிப்புகளில் மாற்றத்தை கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

ஞாயிறு, 6 ஜனவரி, 2013


அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு எப்பொழுது?
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு எப்பொழுது என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.இதற்கு விடை அளிக்கும் படி கடந்த ஒரு வாரமாக குறுந்தகவல்களில் பரவி வரும் அதிகாரபூர்வ மற்ற ஒரு தேதி சூன் 3 - 2013 அன்று.மற்றும் மார்ச் 22 முதல் ஏப்ரல் 22 வரை விண்ணப்பங்கள் அளிக்கப்பட
உள்ளன என்றும் அந்த குறுந்தகவல் செய்திகள் தமிழகம் முழுவதும் உலாவருகின்றன.ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.B.Ed தேர்வினை ஏப்ரல் மாதத்திலேயே முடிக்கும் படி மட்டும் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் ஒரு ஏற்பாட்டினை செய்திருப்பதாக சென்றவாரம் செய்தி வெளியாகிஇருந்தது.மற்றபடி ஆசிரியர் தகுதித் தேர்வினை பற்றிய எவ்வித தேதி அறிவிப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பதை கருத்தில் கொள்ளவும்.வரும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கான விண்ணப்பங்கள் மட்டும் ஆன்லைனில்  விண்ணப்பிக்கும்படி ஏற்பாடு செய்யப்படும் என்று TRB ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில் சென்ற முறை அறிவிக்கப்பட்டபடியே தேதிகள் இந்த முறையும் இருக்கும் என்ற கணிப்பில்தான் இந்த தேதிகளை யாரோ உலவ விட்டிருக்கிறார்கள் .உறுதியான தேதி வரும் வரை ‘ ஓடு மீன் ஓட வருமீன் வரும் வரைக்கும் வாடி இருக்குமாம் கொக்கு‘ என்பது போல தகுதித்தேர்விற்கு தயாராகி வருவதுதான் உத்தமம்..