செவ்வாய், 21 ஜனவரி, 2014

மாணவர்களுக்கு கட்டாய டியூஷன் நடத்தினால் தண்டனை: பள்ளிகல்வி இயக்குனரகம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளைக் கட்டாயப்படுத்தி டியூஷன் நடத்தினால் ஆசிரியர்கள்  கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
ஆங்காங்கே ஒரு சில ஆசிரியர்கள் கட்டணம் வசூலித்து தனிவகுப்புகள் நடத்துவதாகவும், தனிவகுப்புகளுக்கு வராத மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்தள்ளது.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்வதோடு, அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள தலையாசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.