ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

புதிய வெயிட்டேஜ் மார்க்

 90 சதவீதம் அதற்கு அதிகமாக பெற்றால் - 60 மதிப்பெண்
* 80 - 90 சதவீதம் வரை - 54
* 70 - 80 சதவீதம் வரை - 48
* 60 - 70 சதவீதம் வரை - 42
* 55 - 60 சதவீதத்திற்குள் எடுத்தால் - 36

படுத்துக் கொண்டே படிக்க வேண்டாம்

பொதுத்தேர்வு நெருங்கிவிட்ட நிலையில் மாணவர்கள் கண்ணும் கருத்துமாக படித்துக் கொண்டிருப்பீர்கள். சிலருக்கு படுத்துக்கொண்டே படிக்கும் பழக்கம் இருக்கும்.
சாப்பிட, குளிக்க, உறங்க என நம் உடல் ஒவ்வொரு செயலையும் அதற்கேற்ற நிலைகளில் செய்கிறது. உறங்கும் நிலையில் நாம் படித்தால் விரைவில் நம் உடல் உறக்கத்திற்கு தயாராகிவிடும். எனவே நீண்ட நேரம் படிக்க வேண்டும் என்றால் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து படியுங்கள்......

+2 மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வதில் மாற்றம்!

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, மாணவர்களுக்கு பதிவெண் ஒதுக்கீடு செய்வது குறித்து புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ அரசு பொது தேர்வுகளில் அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களை தமிழகஅரசு செயல்படுத்தி வருகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்டூ தேர்வுக்கான விடைத்தாள், சம்பந்தப்பட்ட மாணவரின் "போட்டோ' இருக்கும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவுடன், தேர்வு மையத்திலேயே, மாணவர் பெயர், பள்ளி பெயர், பதிவெண் பகுதியை, அறை கண்காணிப்பாளர் கிழித்து வைத்துக் கொள்ளும் வகையிலும், மாணவர் எழுதிய விடைத்தாளை "பார்கோடிங்' முறையில் மட்டுமே, அடையாளம் காணும் வகையிலும் மாற்றப்பட்டுள்ளது.
மேலும், தற்போது மாணவர்களுக்கு பதிவெண்கள் வழங்கும் முறையிலும் புதுமை செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தேர்வுத் துறையால் ஒதுக்கப்பட்ட மையங்களில், வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் சேர்க்கப்பட்டால், அந்த மையத்தில் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் "ரேண்டம்' முறையில், பதிவெண் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், ஒரே பள்ளி மாணவர்களுக்கு, அடுத்தடுத்த தேர்வு எண்கள், இனிமேல் கிடைக்காது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நூறு சதவீதம் தேர்ச்சிக்காக, சுமாராக படிக்கும் மாணவர், நன்றாக படிக்கும் மாணவரை பார்த்து, ஒரு மதிப்பெண் பகுதி கேள்விகளை எழுத, சில பள்ளிகளில் ஏற்பாடு செய்துவிடுகின்றனர். மேலும், "அறை கண்காணிப்பாளர்களே ஒரு மதிப்பெண் கேள்விக்கான பதிலை, மாணவர்களுக்கு கூறி விடுகின்றனர்' என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் தான், இந்த புதிய முறையை, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன், இந்த ஆண்டு அறிமுகப்படுத்தி உள்ளார். இதற்கான பதிவெண்களை அவரே ஒதுக்கீடும் செய்கிறார். இந்த புதிய முறை மூலம் வேறு பள்ளி மாணவர்களை கலந்து உட்கார வைப்பதால், விதிமீறல்கள் தடுக்கப்படும், என்கிறார் கல்வித்துறை அதிகாரி.

பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம்: மருத்துவர்கள் வலியுறுத்தல் (தினமணி செய்தி)

மாணவர்களுக்கு பள்ளி பருவ காலத்தில் இருந்தே, பாலியல் தொடர்பான கல்வியை கற்றுத் தருவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையொட்டி, சென்னை வடபழனி ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனையில் பாலியல் பிரச்னை குறித்த விழிப்புணர்வு "நேருக்கு நேர்" நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (பிப்.14) நடைபெற்றது.
பாலியல் கல்வி என்பது வாழ்வியலை கற்றுத் தரும் ஆரோக்கியக் கல்வி. இதில் பெண் குழந்தை என்றால் மாதவிடாய் பற்றியும், தவறான, தேவையில்லாத கர்ப்பம் பற்றியும் கற்றுத் தரப்படும். மேலும், ஆபத்தான பாலுறவு பற்றியும் எச்சரிக்கை செய்யப்படும். ஆண்களுக்கு என்றால் அவர்களின் உடல் உறுப்புகள் மற்றும் நண்பர்களோடு பழகுவது பற்றியும் கற்றுத் தரப்படும்.
அறிவியல் பூர்வமான இத்தகைய தகவல்களை சரியான நேரத்தில் தராவிட்டால் தவறான தகவல்களை மாணவர்கள் இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தவறாக தெரிந்து கொண்டு துன்பத்துக்குள்ளாவார்கள். எனவே பாலியல் கல்வி அவசியம் என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் குழந்தையின்மை சிகிச்சை நிபுணர்கள் டி.காமராஜ், கே.எஸ்.ஜெயராணி காமராஜ், சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் பி.ஜி.சுந்தரராமன், மகளிர் சிறப்பு மருத்துவர் கே.ருக்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
.