செவ்வாய், 21 ஜனவரி, 2014

மாணவர்களுக்கு கட்டாய டியூஷன் நடத்தினால் தண்டனை: பள்ளிகல்வி இயக்குனரகம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உயர் வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளைக் கட்டாயப்படுத்தி டியூஷன் நடத்தினால் ஆசிரியர்கள்  கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
ஆங்காங்கே ஒரு சில ஆசிரியர்கள் கட்டணம் வசூலித்து தனிவகுப்புகள் நடத்துவதாகவும், தனிவகுப்புகளுக்கு வராத மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்கள் கடுமையாக நடந்து கொள்வதாகவும் புகார் எழுந்தள்ளது.
இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்வதோடு, அவர்கள் மீது துறைரீதியான ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்படும்.
இதுகுறித்து, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மாவட்டத்தில் உள்ள தலையாசிரியர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

கல்வி வளர்ச்சிக்கான புதிய மென்பொருள் அடிப்படையிலான இணையதளம்!ஜனவரி 20,2014,11:12 IST

எழுத்தின் அளவு :
புபனேஷ்வர்: கல்வி அமைப்பின் தரத்தை மேம்படுத்துவது, புத்தாக்க முறையில் கல்வி நிறுவன வளாக வாழ்க்கையை சிறப்பாக்குவது என்ற நோக்கங்களை அடிப்படையாக வைத்து, இளம் ஐ.டி., நிபுணர்களின் குழு ஒன்று, மென்பொருள் அடிப்படையிலான ஒரு வலைதளத்தை உருவாக்கியுள்ளது.
www.backyard.in என்ற பெயருடைய அந்த வலைத்தளம், பேஸ்புக் போன்று, கல்வி மற்றும் சமூக நெட்வொர்க்கிங் சேவைத் தளமாகும். இந்த தளம், ஒரு கல்வி நிறுவனத்தில் அடங்கிய, முதல்வர், நிர்வாகிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய அனைத்து தரப்பாருக்கும் உதவிகரமாக இருக்கும்.
ஒட்டுமொத்த கல்லூரியையும், லாஜிக்கல் நூலால் கட்டி இணைக்கும் ஒரு அமைப்பாக இந்த தளம் திகழும். இதன்மூலம் மாணவர்கள் பல்வேறு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டின் பட்டதாரி அசிரியர்களின் நிடப்ப படாத பணியிடங்கள்.

ஆசிரியர் பணி காலி இடங்கள் விபரம்- பாட வாரியாக..!!



வ.எ
பாடம்
இருக்கும் காலி இடங்கள்
தகுதிப் பெற்றவர்கள்
மீதி
1
தமிழ்
2298
1815
483
2
ஆங்கிலம்
4826
3001
1825
3
கணிதம்
2664
1365
1299
4
இயற்பியல்
1454
410
1044
5
வேதியியல்
1453
643
810
6
தாவரவியல்
625
62
653
7
விலங்கியல்
622
74
548
8
வரலாறு
4304
1182
3122
9
புவியியல்
1076
75
1001
10
சிறுபான்மை மொழிப்பாடங்கள்
110
91
19
மொத்தம்
19432
8718
10717