சனி, 25 ஆகஸ்ட், 2012

திங்கள், 20 ஆகஸ்ட், 2012


20/08/2012 தினகரன் செய்தி
சென்னை, ஆக.20:
ஆசிரியர் தகுதி தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக் கல் செய்யப்பட்ட வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
திண்டுக்கல்லை சேர்ந்த அருள் மற்றும் நெல்லையை சேர்ந்த தேவேந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக இருந்த 1740 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த ஆட்சியில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நாங்களும் அப்படி தேர்வு செய்யப்பட்டோம். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் எங்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இதுபற்றி அரசுக்கு முறையிட்டோம். இதை அரசு ஏற்றுக் கொண்டு எங்களுக்கு நியமன உத்தரவு வழங்கும் நிலையில் உயர்நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தாக்கல் செய்து, தகுதி தேர்வு எழுதினால்தான் ஆசிரியர் தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு பெற்றனர். இது தவறானது. நாங்கள் தகுதி தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவிப்பதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்டோம். எனவே எங்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டும்.
இதுதவிர 5 ஆண்டுகள் தகுதி தேர்வு எழுதினால் போதும் என்று தற்போதைய அரசு புதிய விதிமுறை வகுத்தும் அதை உயர்நீதிமன்ற நீதிபதி ஏற்க மறுத்து தகுதி தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பு கூறினர். இது தவறானது. எனவே எங்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளித்து எங்களுக்கு நியமனம் உத்தரவு வழங்க வேண்டும். தனி நீதிபதி உத்தரவினால் 1740 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.
இந்த மனுவை தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் விசாரித்து, அரசு 2 வாரத் தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

1743 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனங்கள் குறித்த உண்மை நிலவரங்களை வரும் 19.08.2012 ஞாயிற்றுக்கிழமை தினத்தந்தி  நாளிதளில் கட்டுரையாக வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
***1743 இடைநிலை ஆசிரியர்களை தகுதித்தேர்வின் மூலம் நியமனம் செய்ய வேண்டும் என்று உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்து நாம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதால் 2 மாதங்களுக்கு அரசு இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களை செய்ய முடியாது.***

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012


சனி, 11 ஆகஸ்ட், 2012


ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய 6 லட்சம் பேரில் சுமார் 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஒவ்வொரு தாளிலும் 150-க்கு குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.  மொத்தமாக 2 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக தமிழக அரசிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது.  இந்தத் தேர்வின் அடிப்படையில் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் நியமனமும், இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனமும் நடைபெறும் என்று தமிழக அரசு பேரவையில் அறிவித்துள்ளது.  ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத 6.56 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். தமிழகம் முழுவதும் 1,072 மையங்களில் இந்தத் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. 6 லட்சத்துக்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர்.  இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாளை 2.5 லட்சம் பேரும், இரண்டாம் தாளை சுமார் 4 லட்சம் பேரும் எழுதினர். இதில் 55 ஆயிரம் பேர் இரண்டு தாள்களையும் எழுதினர்.  ஒவ்வொரு தாளிலும் அப்ஜெக்டிவ் வடிவில் 150 மதிப்பெண்ணுக்கு கேள்விகள் இடம்பெற்றிருந்தன. கேள்விகளுக்கு விடையளிக்க ஒன்றரை மணி நேரம் வழங்கப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 90 மதிப்பெண் பெற வேண்டும்.  இந்த இரண்டு விடைத்தாள்களும் மிகவும் கடினமாக இருந்ததாகத் தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். கணிதப் பாட வினாக்களுக்கு விடையளிக்க நேரம் போதவில்லை என்றும் பரவலாகப் புகார் தெரிவித்தனர்.  இந்த விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. முக்கிய விடைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, தேர்வர்களிடம் இருந்த பெறப்பட்ட ஆட்சேபங்கள் இறுதிசெய்யப்பட்டு விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.  5 சதவீதம் கூட தேர்ச்சியில்லை: விடைத்தாள் மதிப்பீட்டுக்குப் பிறகு, இரண்டு தாள்களையும் சேர்த்து சுமார் 2,000 பேர்  மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேசிய சராசரியான 5 சதவீத அளவுக்குக் கூட தேர்வர்கள் தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழக அரசுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.  தள்ளிப்போகும்?: இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் வாரம் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கு விசாரணை, தேர்வு மதிப்பெண்ணை குறைப்பது தொடர்பான ஆலோசனை போன்ற காரணங்களாலும், தேர்வர்களின் தவறுகளை சரிசெய்ய அவகாசம் தேவைப்படுவதாலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவது சில வாரங்கள் தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.  இந்தத் தேர்வில் தேர்ச்சியடையாதவர்களுக்கு வாய்ப்பு வழங்க டிசம்பர் மாதம் மீண்டும் ஒரு தேர்வு நடத்தும் யோசனையும் பரிசீலனையில் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன

புதன், 8 ஆகஸ்ட், 2012

PENDING RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS THIS YEAR


  1. 2010-2011-                   1,743
  2. 2011-2012-                   1,886+3,565
  3. 2012-2013-                   3,378

                                           TOTAL 10,557.

திங்கள், 6 ஆகஸ்ட், 2012

TRB TNTET 2012 RESULTS NEWS

சென்னை, ஆக. 5: ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு இந்த வார இறுதிக்குள் வெளியிடப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதுதொடர்பாக, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறியது:ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளுக்கான முக்கிய விடைகள் தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்து ஏராளமானோர் மனுக்களை அளித்தனர். அந்த மனுக்கள் அந்தந்த பாட நிபுணர்களை வைத்து ஆராயப்பட்டது.மொத்தம் 150 முக்கிய விடைகளில் 4 விடைகளில் மட்டும் மாற்றம் இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கான முக்கிய விடைகள் தொடர்பாக பெறப்பட்ட ஆட்சேப மனுக்கள் திங்கள்கிழமை பரிசீலிக்கப்பட உள்ளன.இரண்டு தாள்களுக்கும் முக்கிய விடைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். அதன் பிறகு, அரசுடன் ஆலோசித்து வரும் வார இறுதிக்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.தகுதி மதிப்பெண் குறைப்பு? ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி பெறாத சூழல் எழுந்தால், சில பிரிவினருக்கு தகுதி மதிப்பெண்ணை குறைப்பது குறித்தும் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது.ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 12-ம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டு தாள்களையும் எழுதினர்.