வியாழன், 26 ஏப்ரல், 2012

என்ன கொடுமை சார் இது?


ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தால் 1743 இடைநிலை ஆசிரியர் தவிப்பு 

03.06.2010 அன்று  1743 இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய அரசாணை வெளியிடபட்டது , இரு கல்வி ஆண்டுகள் முடியும் இன்று வரையிலும் 1743 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப படவில்லை. 9.11.2011 -ல் வெளியிடப்பட்ட செய்தித்தாள் விளம்பரத்தை மேற்கோள் காட்டி சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் பதில் மனு தாக்கல் செய்யாததால்  உயர் நீதிமன்றம் தடையாணை வழங்கியுள்ளது. ஏற்கனவே அறிவிக்க பட்ட பணியிடம் என்பதால் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வை எழுத வேண்டும் என் தேர்வு வாரியம் நீதிமன்றத்தில் சொல்லியிருந்தாலே  தடைக்கான அவசியம் ஏற்பட்டிருக்காது . ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தால் இப்போது தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் எனும் கட்டாயத்திற்கு  1743 இடைநிலை ஆசிரியர்கள் ஆளாக்கபட்டுள்ளனர் . இரு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்க பட்ட பணியிடங்களுக்கே இந்த நிலை என்றால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 10,000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு எத்தனை ஆண்டுகளோ?